வாடிய முகத்துடன் மும்பை வந்த ராகுல் காந்தி.. சரத்பவாரை சந்திக்கும் இந்தியா கூட்டணி தலைவர்கள்!
மும்பை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தன் முடிவில் இருந்து பின்வாங்காத நிலையில், வாடிய முகத்துடன் சென்னையில் இருந்து புறப்பட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் தற்போது மும்பை சென்றடைந்துள்ளனர். தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ள தேசியவாத காங்கிரஸ் சரத்பவாரை நேரில் சந்தித்து தங்கம் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க திமுக, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த இந்த கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி , பாஜக கொண்டு வரும் மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்.

வாடிய முகத்துடன் திரும்பினர்
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வந்த இந்தியா கூட்டணி தலைவர்கள், மு.க ஸ்டாலினை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்து பேசினர். மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ பேபி, கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் விடி சதீஷன் உள்பட 21 தலைவர்கள் சந்தித்து பேசினர்.
எனினும், திமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. தமிழக நலன் கருதி, தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பது என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக கூறிவிட்டது. இதனால், ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் வாடிய முகத்துடன் திரும்பினர். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மும்பைக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் சென்றனர்.
சரத்பவாருடன் சந்திப்பு
மும்பையின் கேண்டி மருத்துவமனைக்கு ராகுல் கந்தி உள்ளிட்ட தலைவர்கள் விரைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் சரத்பவாரை சந்தித்து, மத்திய அரசின் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.
தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிக்கு மொத்தம் 8 லோக்சபா எம்பிக்கள் மற்றும் 1 ராஜ்யசபா எம்பி என 9 எம்பிக்கள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மைக்கு 360 எம்பிக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், மத்திய அரசுக்கு 371 எம்பிக்கள் ஆதரவு கிடக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
எத்தனை கட்சிகள் ஆதரவு?
பாஜகவிற்கு 240 எம்பிக்கள் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் மொத்தம் 14 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தெலுங்கு தேசம் கட்சி - 16, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா - 13, ஐக்கிய ஜனதா தளம் - 12, சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) - 5, - பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி - 2 என இந்த கட்சி எம்பிக்களின் வாக்குகளையும் சேர்த்தால் 299 ஆக உயரும்.
இதுதவிர, என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகள் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து குறைந்தது 62 வாக்குகள் கிடைக்கும் எனவும் மத்திய அரசு கணக்கிட்டு வருகிறது. திமுகவிடம் 22 எம்பிக்கள் உள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்ட 20 எம்பிக்கள் மசோதாவுக்கு ஆதரவு அளிப்பார்கள் எனத் தெரிகிறது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்சிபி கட்சியும் மசோதாவுக்குக் ஆதரவு அளிக்க திட்டமிட்டு வருவதால் தற்போதைய சூழல் அடிப்படையில் லோக்சபாவில் இந்த மசோதவிற்கு ரூட் கிளியர் ஆகும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.




Click it and Unblock the Notifications
