"நீ சூரியன் நான் தாமரை”.. பாட்டு பாடி திமுகவை விமர்சித்த அமைச்சர் ராஜ்மோகன்! ஒன்ஸ்மோர் கேட்ட ஆனந்த்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா விவகாரம் தொடர்பாக, பாட்டு பாடி திமுக - பாஜகவை விமர்சித்துள்ளார் அமைச்சர் ராஜ்மோகன். பாடல் பாடிய ராஜ்மோகனிடம் ஒன்ஸ்மோர் கேட்டார் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.

தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் சாதனை விளக்க வெற்றிக் கூட்டம் சென்னை பெரியமேட்டில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், ராஜ்மோகன், வெங்கட்ரமணன், மரிய வில்சன், குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினர்.

TVK Minister Rajmohan Takes a Song Dig at DMK and BJP Over Delimitation Bill

தொகுதி மறுவரையறை விவகாரம்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்து ஆதரவை விலக்கிக் கொள்ள கோரிக்கை வைத்த நிலையில் அதனை அவர் ஏற்க மறுத்துள்ளார்.

மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்ததற்கு நடிகரும் அரசியல் செயல்பாட்டாளருமான பிரகாஷ்ராஜ் ஆட்சேபணை தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், "அவசர அவசரமாக திருத்தங்களோடு பாஜக கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதா மிகவும் ஆபத்தானது. மதம், மொழி, இனம், சிறுபான்மையினருக்கு, இந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. இதை அனைவருக்கும் உணர்த்திய திமுக, மதவாத சக்திக்கு துணை போவது முதுகில் குத்தும் செயல் இல்லையா? இது சுயநலமான முடிவு. திமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" எனப் பேசியிருந்தார்.

அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு

இதனை தவெக அமைச்சர் ராஜ்மோகன் இன்று விமர்சித்துப் பேசியுள்ளார். சென்னை பெரியமேட்டில் தவெக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், "நம் அண்ணன், நம் செல்லம், நம் மீது பாசம் வைத்திருக்கிற நடிகர் பிரகாஷ் ராஜ். அவர் நல்ல கலைஞன், தேசிய விருது வாங்கிய கலைஞன். அவர் ஒரு வீடியோவில் கண்ணாடி போட்டுக்கொண்டு பேசுகிறார்.

இந்த தொகுதி மறுவரை என்பது தப்பு இல்லையா? இது மக்களுக்கு செய்கின்ற துரோகம் இல்லையா? திமுக தொகுதி மறுவரையறைக்கு போய் ஆதரவு கொடுப்பது முதுகில் குத்துவதைப் போன்றது இல்லையா?" என்கிறார்.

ஆ.ராசா எச்.ராஜாவாக மாறிவிட்டார்

இதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே எங்கள் தலைவர் சொன்னார் இல்லையா? திமுகவை நம்பாதீர்கள் என சொன்னார் இல்லையா? அப்போது திமுகவுக்கு நீங்கள் அனைவரும் சேர்ந்து முட்டுக் கொடுத்தீர்கள் இல்லையா? டிரைவர் பையன் எம்.எல்.ஏ ஆக்குவீங்களான்னு நீங்கள் கேட்டீர்கள் இல்லையா? அந்த சாதாரண டிரைவர் மகன் தான் கொள்கையோடு இன்று நிற்கிறார் இல்லையா? மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையோடு நின்றுகொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டிலேயே கொள்கையோடு நிற்கக்கூடிய ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம். எனது மதிப்பிற்குரிய அண்ணன் ஆ.ராசா அவர்கள் பேசுகிறார். சமூக ஊடகங்களில் மீம் போடுகிறார்கள் என்று. எச்.ராஜாவாக மாறிவிட்ட ஆ.ராசா. வேதனையாக இருக்கிறது, எத்தனை பெரிய துரோகம் இது.

ஒரு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சொல்கிறார். 6 மாத ஆட்சி காலத்தில் அடிமட்ட ஊழலை தவெக வேரறுத்திருக்கிறது என்று. ஒரு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சொல்லியிருக்கிறார். இதைவிட என்னங்க சாதனை? 2026-ல் இல்லை, இனி இந்த நூற்றாண்டு முழுக்க தளபதி ஆட்சிதான்" என்று பேசினார்.

நீ சூரியன்.. நான் தாமரை - பாட்டு பாடிய ராஜ்மோகன்

மேலும், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டை விமர்சித்த அமைச்சர் ராஜ்மோகன், "நீ சூரியன்.. நான் தாமரை.. நீ வந்தால்தானே மலருவேன்" என்று பாட்டு பாடினார். பாஜகவும் திமுகவும் கூட்டணி அமைக்க உள்ளதாக விமர்சிக்கும் வகையில் அவர் இப்பாடலைப் பாடினார்.

அதனை மேடையில் இருந்த அமைச்சர்கள் ரசித்தனர். அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் 'ஒன்ஸ் மோர்' கேட்டு ராஜ்மோகன் பாடியதை உற்சாகப்படுத்தினார். அமைச்சர் மற்றும் தொண்டர்கள் கோரிக்கைக்கு இணங்க மீண்டும் ஒருமுறை அப்பாடலைப் பாடினார் அமைச்சர் ராஜ்மோகன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+