சி.வி.சண்முகம் ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை கொத்தாகப் பறித்த எடப்பாடி பழனிசாமி! அதிமுகவில் சலசலப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் பலரின் கட்சிப் பொறுப்புகளை பறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளார். அவர் விரைவில் அதிமுகவில் இருந்து வெளியேறி தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களான விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலரின் கட்சி பதவிகளைப் பறித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

edappadi palaniswami aiadmk cv shanmugam

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த
A.ஆனந்தி, மாவட்ட கழக இணைச் செயலாளர்
K.V.N. வெங்கடேசன், மாவட்ட கழகப் பொருளாளர்
K.S.ஜெயபிரகாஷ், மாவட்ட இளைபஇளம் பெண்கள் பாசறைச் செயலா
S.பாஸ்கரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்
E.எழில்ராஜ், விழுப்புரம் மண்டய தகவல் தொழில்நுட்பப்பிரிவு இணைச் செயலாளர்
R.நடராஜன் (எ) கிருஷ்ணன், வல்லம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
R.விஜயன், மயிலம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
V.கிருஷ்ணமூர்த்தி, ஒலக்கூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
K.பன்னீர், ஒலக்கூர் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
C.R.ரூபன்ராஜ். திண்டிவனம் நகரக் கழகச் செயலாளர்
V.செந்தில்குமார், மயிலம் மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்றச் செயலாளர்
ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

edappadi palaniswami aiadmk cv shanmugam

சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்தனர். இதனால் அவர்களின் கட்சி பதவிகளை பறித்தார் எடப்பாடி பழனிசாமி.

பின்னர் எஸ்பி வேலுமணி தலைமையிலான அணியினர் மன்னிப்பு கடிதம் கொடுத்து எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தனர். எனினும் இந்த அணியில் இருந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் இன்னும் அதிமுகவில்தான் இருக்கின்றனர். சிவி சண்முகம் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட பசுபதியின் ஆதரவாளர்களுக்கும், சி.வி. சண்முகம் அணியினருக்கும் இடையே அண்மையில் செயல்வீரர்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறி, கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை பறித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+