ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
சென்னை: ரூ. 20 ஆயிரம் கோடி ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் வகையில் தமிழக அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கிடைத்த தகவல் குறித்து மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது: ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறுத்தும் முடிவை தற்போது வரை அரசு எடுக்கவில்லை. நிதி அதிக அளவில் தேவைப்படுவதால் அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறோம் என நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக மின்சாரத் துறையில் மிகப் பெரிய டிஜிட்டல் புரட்சியாகப் பார்க்கப்பட்ட ரூ. 20,000 கோடி மதிப்பிலான 'ஸ்மார்ட் மீட்டர்' (Smart Meter) திட்டம் தற்காலிகமாக முழுமையாகக் கைவிடப்படுவதாகத் தமிழக அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
மின் வாரியத்தில் எழுந்த முறைகேடு புகார்கள் மற்றும் புதிய அரசின் கீழ் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி ஆகியவையே இந்த மெகா திட்டம் முடக்கப்படக் காரணியாக அமைந்துள்ளன.
'ஸ்மார்ட் மீட்டர்' என்றால் என்ன? அது ஏன் கொண்டு வரப்பட்டது?
தற்போது தமிழகத்தில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின் வாரியப் பணியாளர்கள் (Assessor) நேரடியாக நேரில் சென்று, பழைய மீட்டர்களில் ரீடிங் எடுத்து மின் பயன்பாட்டைக் கணக்கிட்டு வருகின்றனர்.
பல நேரங்களில் பணியாளர்கள் நேரில் வராமல், தோராயமாக (Average) அதிக யூனிட்டுகளைக் கணக்கெழுதி நுகர்வோர்களிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் தொடர்ந்து எழுந்தன.
இதற்கு நவீன தொழில்நுட்பப் தீர்வாக உருவானதுதான் 'ஸ்மார்ட் மீட்டர்'. இது ஒரு மென்பொருள் மற்றும் அதிநவீன தொலைத்தொடர்பு (Software & Telecom) வசதி கொண்ட டிஜிட்டல் கருவி.
இந்த மீட்டர் பொருத்தப்பட்டால், மின் வாரிய ஆட்கள் யாரும் நேரில் வரத் தேவையில்லை. நாம் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறோம் என்பதை இந்த மீட்டர் தானாகவே துல்லியமாகக் கணக்கிட்டு, ஆன்லைன் மூலமாக மின் வாரியத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவிடும். மேலும், நடப்பு மாதத்திற்கான மின் கட்டண விவரம் உடனுக்குடன் நுகர்வோரின் மொபைல் போனுக்கே எஸ்.எம்.எஸ் (SMS) ஆக வந்துவிடும்.
இந்தத் திட்டத்திற்காக, தமிழகம் முழுவதும் உள்ள 3.04 கோடி வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தி, அதனை அடுத்த 93 மாதங்கள் (சுமார் 8 ஆண்டுகள்) பராமரிக்கும் வகையில் கடந்த 2025 மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில் முந்தைய ஆட்சிக் காலத்தில் உலகளாவிய பிரம்மாண்ட டெண்டர் கோரப்பட்டது.
இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 50 பெரிய நிறுவனங்கள் போட்டியிட்டன. தொழில்நுட்பப் புள்ளிகள் மற்றும் விலைப் புள்ளிகள் சரிபார்க்கப்பட்டு, இறுதி ஒப்புதலுக்கு அரசு காத்திருந்த நிலையில், கடந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைப் பிடித்து, அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
புதிய அரசு பொறுப்பேற்றவுடன் இந்த மெகா திட்டத்தை முடக்குவதற்குப் பின்னால் இரு முக்கியக் காரணங்கள் உற்றுநோக்கப்படுகின்றன.
1. மின் வாரியத்தில் முறைகேடு புகார்கள்: மின் வாரியத்தில் ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்துள்ளதாகப் புகார்கள் வெடித்தன. ஊழலற்ற நிர்வாகத்தை முன்னிறுத்தும் புதிய அரசு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அறிவிக்கப்பட்ட பல்வேறு மின் வாரிய டெண்டர்களை அதிரடியாக ரத்து செய்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த ரூ.20,000 கோடி டெண்டரும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2. '200 யூனிட் இலவச மின்சாரம்' தந்த நிதி நெருக்கடி: புதிய அரசின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியான "வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்" வழங்கும் திட்டம் தற்போது தமிழகத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதி கிடைத்துள்ள போதிலும், அரசுக்குக் கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டு மின் வாரியத்தின் நிதிச் சுமை அதிகரித்துள்ளது. இந்தக் கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் ஒரு பகுதியாகவே, தற்போதைக்கு இவ்வளவு பெரிய தொகையைச் செலவழித்து 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தைச் செயல்படுத்த வேண்டாம் என அரசு முடிவெடுத்துள்ளது.
ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கைவிடப்பட்டுள்ளதால், வழக்கம்போல மின் வாரியப் பணியாளர்கள் நேரில் வந்து மின் பயன்பாட்டைக் கணக்கிடும் முறையே தமிழ்நாட்டில் தொடரும்.
இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கூறியிருப்பதாவது: ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறுத்தும் முடிவை தற்போது வரை அரசு எடுக்கவில்லை. நிதி அதிக அளவில் தேவைப்படுவதால் அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறோம் என நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார்












Click it and Unblock the Notifications