இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பங்கள் இன்னும் முழுமையாக அடங்காத நிலையில், அந்தக் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மேலும் சில அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் நாளை தவெகவில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அதிமுக தலைமைக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதன் பின்னர் கட்சிக்குள் அதிருப்தி குரல்கள் அதிகரிக்கத் தொடங்கின. தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர்.

AIADMK

இந்த நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான அணிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக வெடித்தன.

அதிமுக

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போதும் இந்த பிளவு வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது சில உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்பட்டதால், அதிமுகவில் பதற்றம் மேலும் அதிகரித்தது. இதையடுத்து கட்சிக்குள் ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதன் காரணமாக அதிமுகவில் இருந்து சில எம்எல்ஏக்கள் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அவர்களது ராஜினாமாவால் சில தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி

இந்த சூழலில், நிலைமை மேலும் மோசமடையக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினருக்கு இடையே சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இரு தரப்பினரும் மீண்டும் ஒன்றாக செயல்பட ஒப்புக்கொண்டனர். அதன்படி எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியதுடன், கட்சித் தலைமையுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், அதிமுகவில் நிலவும் அதிருப்தி முழுமையாக முடிவுக்கு வரவில்லை.

தவெக

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுகவைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் தவெகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் தவெக நிர்வாகிகள் முன்னிலையில் கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. அவர்களுடன் பல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளும் இணைந்துள்ளனர்.

தேர்தல் தோல்வி

குறிப்பாக பல ஆண்டுகளாக அதிமுகவில் இருந்து பல்வேறு பொறுப்புகளை வகித்த தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியிருப்பது, சாதாரண நிகழ்வாக பார்க்க முடியாது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் உருவான மனக்கசப்புகளும், எதிர்கால அரசியல் நிலைமை குறித்த குழப்பங்களும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

சி.வி. சண்முகம்

இதற்கிடையே மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், அரசியல் வட்டாரங்களில் இதுதொடர்பான பேச்சு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த பட்டியலில் சிவி சண்முகம், சி விஜயபாஸ்கர், எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பெயர்கள் பலமாக அடிபடுகிறது.

தமிழக வெற்றிக் கழகம்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிக அளவில் இணைந்து வருவது கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது. ஒருபுறம் அதிமுகவை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், மறுபுறம் கட்சியில் இருந்து தொடர்ந்து நிர்வாகிகள் வெளியேறுவது புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+