தவெக ஆளும் கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லை.. திருமாவளவன் பேச்சு
சென்னை: தவெக ஆளும் கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லைதான். ஏனென்றால் நாங்கள் திமுக கூட்டணியில் போட்டியிட்டோம். எப்படி மகிழ்ச்சியடைய முடியும்.. ஆர் எஸ் எஸ் பெற்றெடுத்த பிள்ளை என தவெகவை விமர்சித்து இருக்கிறோம்.. இப்போது ஆட்சியில் பங்கு என்றதும் கட்டிப்பிடித்து உருள முடியுமா என விசிக விருது வழங்கும் விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசினார்.
சென்னை காமராஜர் அரங்கில் விசிக விருது வழங்கும் விழா நடந்தது. அப்போது திருமாவளவன் பேசியதாவது:-

தோழர் வீரபாண்டியன் சொன்னதை போல தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று இருக்கிறது, வந்து இருக்கிறது என்றால் அதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை தான்.. ஏனென்றால் நாங்கள் திமுக கூட்டணியில் போட்டியிட்டோம். எப்படி மகிழ்ச்சியடைய முடியும். இன்னும் சொல்லப்போனால் நாங்கள் தவெகவை விமர்சித்து இருக்கிறோம். எப்படி பதவிக்காக நாம் ஒட்டிக்கொள்ள முடியும். எப்படி பதவிக்காக கட்டிப்புரண்டு உருள முடியும்.
ஆர் எஸ் எஸ் பெற்றெடுத்த பிள்ளை என சொல்லிவிட்டு, இல்லை இல்லை உங்களுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் எனக்கு துணை முதல்வர் பதவி தாருங்கள் என்றா பேசினோம்.. கெஞ்சினோம்..












Click it and Unblock the Notifications