பணம் அனுப்ப பல வழிகள் இருக்கு.. ஷோஃபாவில் தான் அனுப்ப வேண்டுமா? உதயநிதிக்கு திருமாவளவன் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணம் அனுப்ப பல வழிகள் இருக்கும் போது அதனை ஏன் ஷோஃபாவில் தான் அனுப்ப வேண்டுமா என உதயநிதி ஸ்டாலினுக்கு திருமாவளவன் மறைமுக பதிலடி கொடுத்தார். என்னை முதல்வராக்கும் முயற்சியை நான் தடுத்தேன், அதை ஏன் யாரும் சொல்லவில்லை எனவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றபோதே நாங்கள் விஜய்க்கு ஆதரவு அளித்து இருக்க முடியும் ஆனால் நாங்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடைசி நிமிடம் வரை திமுக தலைமைக்கு தகவல் தெரிவித்தோம் என்று திருமாவளவன் கூறினார்.

முன்னதாக, "நம் பெயரை சொல்லி, நம் திராவிட மாடல் அரசின் சாதனைகளை சொல்லி ஓட்டு வாங்கி, உடன்பிறப்புகள் உழைப்பால் சட்டமன்ற உறுப்பினராகி, சிலர் அமைச்சராகவே ஆகிவிட்டனர். அவர்கள் யாரும் விமர்சனம் செய்வது கிடையாது. ஏனென்றால் சோஃபாவை பிடுங்கிவிடுவார்கள் இல்லையா?" என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து இருந்தார்.

Thirumavalavan Indirect Reply to Udhayanidhi stalin Money Can Be Sent in Many Ways Why Only Through a Sofa

திருமாவளவன் பேச்சு

சென்னை காமராஜர் அரங்கில் விசிக விருது வழங்கும் விழா நடந்தது. அப்போது திருமாவளவன் பேசியதாவது:- எதோ ஒரு கட்சியில் சேர்ந்தால் அந்த கட்சியில் எனக்கு ஒரு சீட் வேண்டும் என சொல்பவர்கள் தான் இருக்கின்றனர். ஏன் விசிகவால் 234 தொகுதிகளில் போட்டியிட முடியவில்லை என விவாதிக்க முடியவில்லை. விசிகவின் பலம் என்ன என விவாதிக்க வேண்டும் இல்லையா.. தவெகவுக்கு நான் ஆதரவு அளித்தால், எதன் அடிப்படையில் நீங்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்தீர்கள் என கேள்வி கேட்கும் இளைஞர்கள் எனக்கு வேண்டும். அரசியல் புரிதல் வேண்டும்.

முன்னாள் முதல்வர் அண்ணன் மு.க ஸ்டாலின் திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையே உள்ள அரசியல் உறவை இல்லை என அறிவித்து இருக்கிறாரா? இந்த முடிவை அவர் எடுத்தாரா? நான் எடுத்தேனா? என் தம்பிகளுக்காக நான் இதனை முன் வைக்கின்றேன். யார் மீதும் எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது.

திருமாவளவன் கிங் மேக்கர்

அரசியல் என்பது முற்றிலும் வேறு. தனிநபர் உறவு என்பது வேறு. எல்லாத்தையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. இந்த கூட்டணியில் இருந்தால் அவரிடம் பேசக்கூடாது. அந்த கூட்டணியில் இருந்தால் அவரிடம் பேசக்கூடாது. தமிழ்நாட்டில் மட்டும் தான் இப்படி இருக்கிறது. டெல்லியில் கூட இப்படி இல்லை. அதை உடைத்தவன் திருமாவளவன். அப்போது திமுக கூட்டணியில் இருந்த போது, முதன் முதலாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை முதலில் பார்க்க போனேன்.. பார்த்துவிட்டு வந்தாலும் திமுக கூட்டணியில் இருப்போம். எடப்பாடியை பார்த்தாலும் திமுக கூட்டணியில் இருப்போம்.

இன்று தவெக கூட்டணியில் இருப்பதனால், நாங்க மழுப்பி பேசுறோமாம்.. சோசியல் மீடியாவுக்கு போகாமல் இருந்தாலே நாம் உருப்பட்டுவிடுவோம். நம் கட்சி விடுபட்டுவிடும். அர்ப்பர்கள் தான் அங்கு அதிகம் இருக்கிறார்கள். நம் கட்சி வளர்வதை பிடிக்காதவர்கள் அவதூறுகளை பரப்புகிறார்கள். எப்புட்றா இவங்க கூட வந்தவங்க எல்லாரும் காலியாகிவிட்டாங்க இவன் மட்டும் வளர்கிறான்.. சிலர் திருமாவளவன் கிங் மேக்கர் என போடுகிறார்கள். நானா போட சொன்னேன்..

காலம் தீர்மானித்தது

118 தொகுதிக்கு 2 தொகுதிகள் தவெகவுக்கு வேண்டும். கடைசியாக நாங்க இருந்ததால் நாங்க தான் கிங் மேக்கர் ஆக இருந்தோம். இதை விஜய் தீர்மானிக்கவில்லை. திருமாவளவன் தீர்மானிக்கவில்லை. காலம் தீர்மானிக்கிறது. எம்மை ஓரம் கட்ட பார்த்தாலும், ஒதுக்கி வைக்க பார்த்தாலும் விசிக மையம் என்பதே மையம் என்பதை தீர்மானிப்போம் என பல ஆண்டுகளுக்கு முன்பே மேடைகளில் முழங்கியிருக்கிறோம். நீ தலித் இயக்கம் என பார்க்கலாம்.. திருமாவளவன் தலித் என பார்க்கலாம். 2 சீட் என அலட்சியப்படுத்தி சொல்லலாம். ஆனால் காலம் எங்க பக்கம் என்று சொல்கிறோம்.

ஷோஃபாவில் தான் பணம் கொடுக்க வேண்டுமா?

வரும் ஆகஸ்டு 17 ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. குறைந்தது 10 லட்சம் பேர் திரண்ட மாநாடாக அது இருக்க வேண்டும். இந்த தேர்தலில் நான் போட்டியிட போகிறேன் என்பதை கட்சியினரிடம் கேட்காமல் சொல்லிவிட்டேன். பிறகு அதில் ஏன் உறுதியாக இல்லை என கேட்டனர். ஏனென்றால் நான் ஆலோசித்து முடிவு எடுக்கவில்லை. என் விருப்பத்தினை செய்தேன். பிறகு கட்சிக்காக எனது விருப்பத்தை விட்டு கட்சி நலனுக்காக நான் விட்டுக்கொடுத்தேன்.

இன்றைக்கு அமைச்சரவையில் பங்கு பெற்றதும், ஷோஃபா வந்து இறங்கியதும் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கிறார் என சொல்கிறார்கள். ஏன் பணம் கொடுக்க வேண்டும் என நினைக்கின்றவன் வேறு எந்த வழியிலாவது கொடுக்க முடியாதா? ஷோஃபாவில் தான் கொடுக்க வேண்டுமா? நீ சொல்கிற மாதிரி நூற்றுக்கணக்கான கோடி என்றால் எப்படி ஷோஃபாவில் கொடுத்து அனுப்ப முடியும். அவங்க அரசியல் செய்கிறார்களாம். நம்மளை டேமேஜ் செய்கிறார்களாம்.. காயப்படுத்துகிறார்களாம்.. என்னை மதிப்பிட வேறு யாருக்கும் அந்த ஆளுமை இல்லை.

அதிமுக திமுக கூட்டணியில் திருமாவளவன் முதல்வர்

ஏன் ஷோஃபா எடுத்து வந்தார்கள் என்றே தெரியவில்லை. விஜய் வருகிறார் என்றதும் உட்காருவதற்கு இடம் இல்லை என்பதால் புதுசா வந்த தோழர்கள் கொண்டு வந்தார்கள். இன்னொருத்தர் வந்து துணை முதல்வர் பதவிக்காக டீலிங் நடந்துகொண்டு இருக்கு.. இதனால் தான் அவர் வெயிட் பண்ணிட்டு இருந்தார். இன்னொரு பக்கம் திருமாவளவன் முதல்வர் ஆக பிளான் பண்ணிட்டு இருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஒரு உண்மையை சொல்கிறேன்.. அதிமுக திமுக கூட்டணியில் திருமாவளவன் முதல்வர் என பேசினர். அதை தடுத்ததே நான் தான். ஆனால் இன்று அதை யாரும் சொல்லவில்லை. திருமாவளவன் முதல்வர் ஆவதை தடுத்ததே நான் என்று யாரும் விவாதிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+