இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சீமான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். தவெக ஆட்சியை "அரசியல் பேரிடர்" என குறிப்பிட்ட அவர், கரூர் சம்பவம் முதல் கூட்டணியில் சேர்ந்துள்ள காங்கிரசையும் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் முடிந்ததும், ஸ்டாலின் அவர்கள் மோடி, அமித்ஷா காலில் விழுவார் என்று விஜய் சொன்னார். இரண்டு வாரத்தில் இவர் போய் விழுகிறார். மக்கள் இவ்வளவு ஆதரிச்சதே அதிகம், இன்னும் கொஞ்சம் ஆதரிக்கணுமாம்?" என்றும் சீமான் பேசியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், திருச்சியில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் பேசிய விஜய், ஆதரித்தது தான் ஆதரித்தீங்க.. இன்னும் கொஞ்சம் ஆதரித்து இருந்தால் ரொம்ப நல்லா இருந்து இருக்கும் என பேசியிருந்தார். விஜய் இப்படி பேசியதை தான் சீமான் விமர்சித்துள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றி கழகத்தை கடுமையாக விமர்சித்தார். சீமான் பேசியதாவது:-

Seeman Launches Sharp Attack on Vijay and TVK - People Have Already Supported Him Enough

காங்கிரசுக்கு ரோஷம் இருக்கிறதா?

நாம வளரக்கூடாது என்று நினைக்கிறார்கள். எதற்காக நாங்கள் வெல்லக்கூடாது என்று நினைக்கிறீர்களோ அதற்காகத்தான் நாங்கள் வென்றே தீர வேண்டும் என்று போராடுவோம். என்னுடைய வெற்றியை சற்று தள்ளிப்போடலாம். ஆனால் தடுத்துவிட முடியாது. இந்த ஒரு மாதம் என்னுடைய கையில் ஆட்சி இருந்திருந்தால் ஒருவன் தூங்கியிருக்க முடியாது. என்னென்னமோ நாட்டிலே நடக்குது என்று சொல்லியிருப்பான்.

காங்கிரஸ் கட்சியிடம் நான் என்ன கேட்கிறேன். நீங்கள் எல்லாம் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுறீங்களா? உங்களுக்கு மானம், ரோஷம், வெட்கம் ஏதாவது இருக்கா? திமுகவுக்கு இப்போதுதான் அறிவு வருகிறது. 10 எம்பி திமுக போட்ட பிச்சையில் வைத்து இருக்கிறார்கள். உண்மையில் மானஸ்தன் விலகி, தவெகவுடன் நின்று வென்று வாருங்கள். திமுக தயவில் ஒரு ராஜ்யசபா சீட், இப்போது டிவிகே ஆட்சியில் ஒரு எம்பி. வீடு வீடாக பிச்சை எடுப்பதற்கும், கட்சிகளிடம் போய் வாங்குவதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது.

மேகதாது அணை விவகாரம்

இதற்கு ஏன் நீங்கள் கட்சி என்ற ஒன்றை வைத்துள்ளீர்கள். மாணிக்கம் தாகூர் உதயநிதியிடம் கேள்வி கேட்கிறார். தமிழக முதல்வர் மேகதாது அணைக்காக மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். நீங்கள் ஏன் சைலண்ட் மோடுக்கு போகிறீர்கள் என்று கேட்கிறார். மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என்று சொல்வது யார்? காங்கிரஸா அல்லது வேறு கட்சியா?

தமிழ்நாடு காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி வைக்கும், அகில இந்திய காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைக்கும் என்கிறார். என்ன கட்சி இது? ஜோதிமணி ஒரு கட்சி வச்சிருக்கு... சிதம்பரமும் அவர் மகனும் ஒரு கட்சி வைத்து இருக்கிறார்கள்.

திமுக வாக்கில்தான் மாணிக்கம் தாகூர் வென்று இருக்கிறார். இப்போ அந்த பதவியை விலகுங்க. விலகிட்டு திமுகவை கடுமையாக விமர்சிங்க. தவெக கூட்டணியில் நின்னு ஜெயிச்சிட்டு என்ன வேணும்னாலும் பேசுங்க. வாக்கு முகவர் போட வக்கில்லை. தனியாக நின்றால் எந்த இடத்திலாவது டெபாசிட் வாங்குமா? நான் தோற்றால் கூட 4 விழுக்காடு வைத்து இருக்கிறேன். நீ ஜெயிச்சால் கூட வராது.

இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்..

தேர்தல் முடிந்ததும், ஸ்டாலின் அவர்கள் மோடி, அமித்ஷா காலில் விழுவார் என்று விஜய் சொன்னார். இரண்டு வாரத்தில் இவர் போய் விழுகிறார். போராடி தடுத்து வைத்து இருக்கும் அனைத்திலும் கையெழுத்து போட்டுவிட்டார். ஊடகத்தை மதிப்பதே இல்லை. ஆனால் அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் ஊடகங்கள் காட்டுகின்றன. போகிறார், வருகிறார் என்று போடுகிறார்கள். நாம் மண் போல் மதிப்போம். நம்மளை மதிப்பது இல்லை.

மக்கள் இவ்வளவு ஆதரிச்சதே அதிகம், இன்னும் கொஞ்சம் ஆதரிக்கணுமா? தவெக வென்றது அரசியல் பேரிடர். கரூர் சம்பவத்திற்கு மூல காரணம் நீங்கள்தான் (விஜய்). நீங்கள் கரூருக்கு வரவில்லை என்றால் கூட்டம் இல்லை. கூட்டம் இல்லை என்றால் நெரிசல் இல்லை. அந்த குற்ற உணர்வோடு சம்பவத்திற்கு நானும் ஒரு காரணமாக இருந்துட்டேன் என்று ஒரு வருத்தம் கூட இல்லை. ஆன் என் மேலே பழியை போடுகிறார்கள் என்று சொல்கிறீர்கள். 41 மரணத்திற்கு ஒரு வழக்கு கூட போடவில்லை. தற்காத்துவிட்டது யார்? பாஜகவும் அதிமுகவும். இப்போது உங்களிடம் அரசாங்கம் இருக்கிறது. கரூர் சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள்" இவ்வாறு அவர் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+