சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி
சென்னை: சொந்த ஊர், சொந்த தொகுதியில் டெப்பாசி கூட வாங்காதவர் எங்களை பற்றி பேசுகிறார்கள் என்றும், பிச்சையையே பொழப்பாக வைத்திருக்கும் அவர்கள் எங்களை பார்த்து பிச்சை எடுக்கிறோம் என்று சொல்வது காமெடி என சீமானுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். மாணிக்கம் தாகூர் கூறியிருப்பதாவது:-
2026 சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி என்பது மிகப்பெரிய ஷாக். அந்த ஷாக்கில் இருந்து வெளிவர முடியாமல், மீள முடியாமல் புலம்பலாலும், கதறலாலும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த புலம்பல், கதறலின் ஒரு வெளிப்பாடு தான் உதயநிதியிடம் இருந்து இப்போது வந்து இருக்கிறது. இது யாரிடம் இருந்து வந்தது என்றால், அண்ணன் சீமானிடம் இருந்து வந்துள்ளது. எப்போது சீமான் அவர்களுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் சீர் கொண்டு கொடுத்தாரோ, அப்போதே டீலிங் நடந்து இருப்பது தெரிந்தது.

பிச்சையை பிழைப்பாக வைத்திருக்கும் சீமான்
என்னென்னமோ பேசியிருக்கிறார் சீமான். ஆனால் இன்று உதயநிதிக்கு வக்காலத்து வாங்கி பேசியிருக்கிறார். காங்கிரஸ் உப்பு போட்டு சாப்பிடுகிறதா, காங்கிரஸ் பிச்சை எடுத்துச்சா என்று எல்லாம் பேசியிருக்கிறார். இவர் பேசியது ரொம்ப காமெடியாக இருக்கிறது. பிச்சையையே பிழைப்பாக வச்சு இருக்கிற நீங்கள் எல்லாம், எங்களை பார்த்து பிச்சை எடுத்து பிழைக்கிறோம் என்று சொல்கிறீர்கள். காங்கிரஸ் 140 வருஷ கட்சி. 4 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. 120 நாடாளுமன்ற எம்.பி.க்கள் இருக்கிறார்கள்.
நம்மளுக்கு சொந்த தொகுதியான காரைக்குடியிலேயே டெபாசிட் வாங்கத் தெரியல. உள்ளூரிலேயே விலை போகாத சரக்கு நம்ம சரக்கு. இதை வைத்துக்கொண்டு ஊர் முழுக்க சுத்திக்கொண்டு அவனாக்கும், இவனாக்கும் என பேசுவது சரியில்லை. வீர வெங்காயம், வசன வெங்காயம் என எல்லா வெங்காயமும் பேச எங்களுக்கும் தெரியும். நானும் இதே மண்ணில் தான் பிறந்து இருக்கிறேன். நாக்கை அடக்கி பேசினால், மரியாதை கொடுப்போம். இல்லைன்னா இதே மாதிரி காங்கிரஸ்காரன் திருப்பி அடிப்பான்.
ஏசி ரூமில் இருந்து வசூல் மட்டுமே செய்கிறார்
தமிழ், தமிழர் என்று சொல்லி அரசியல் பேசிக்கொண்டு இருக்கும் இவர் இதுவரை எத்தனை முறை இலங்கைக்கு சென்று இருக்கிறார். போறதெல்லாம் பாரிஸுக்கு, இங்கிலாந்துக்கு, கனடாவுக்கு. ஆனால் பேசுவது இலங்கை தமிழருக்கு. அங்கு பாடுபட்டு இருக்கும் மக்களை பார்க்காமல், சும்மா ஏசி ரூமில் இருந்துட்டு வசூலை போட்டுவிட்டு வரும் சீமானுக்கு இவ்வளவு இருந்தால், எனக்கு எவ்வளவு இருக்கும். சொந்த ஊரில் டெபாசிட் வாங்க முடியலை. எங்களைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கீங்க.
2014-ல் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். ஏனென்றால் உங்களை மாதிரி ஆளுங்க பொய் பிரசாரம் செய்ததால். அந்த தேர்தலில் திமுகவும் தோல்வியை தானே சந்தித்தது. அடுத்த தேர்தலில் திமுகவும் வெற்றி பெற்றது, நாங்களும் வெற்றி பெற்றோம் சேர்ந்து போட்டியிட்டதால். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் நாங்கள் சொல்லியா கூறினார்? அவருக்கு தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை பெற அப்படி பேசினார். திமுக தயவால் தான் நாங்கள் வெற்றி பெற்றோம் என்றால், எங்கள் தயவால் தான் உதயநிதி ஸ்டாலினும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். ராகுல் காந்தியை அவமானப்படுத்தி இனி சீமான் பேசினால், நாங்களும் திருப்பி அடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
சீமான் என்ன பேசினார்?
சீமான் முன்னதாக பேசியிருந்ததாவது:- "காங்கிரஸ் கட்சியிடம் நான் என்ன கேட்கிறேன். நீங்கள் எல்லாம் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுறீங்களா.. உங்களுக்கு மானம், ரோஷம், வெட்கம் ஏதாவது இருக்கா? திமுகவுக்கு இப்போதுதான் அறிவு வருகிறது. 10 எம்பி திமுக போட்ட பிச்சையில் வைத்து இருக்கிறார்கள். உண்மையில் மானஸ்தன் என்றால் விலகி, தவெகவுடன் நின்று வென்று வாருங்கள். திமுக தயவில் ஒரு ராஜ்யசபா சீட்.. இப்போது டிவிகே ஆட்சியில் ஒரு எம்பி.. வீடு வீடாக சென்று பிச்சை எடுப்பதற்கும், கட்சிகளிடம் போய் வாங்குவதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது.
இதற்கு ஏன் நீங்கள் கட்சி என்ற ஒன்றை வைத்துள்ளீர்கள். திமுக வாக்கில்தான் மாணிக்கம் தாகூர் வென்று இருக்கிறார். இப்போ அந்த பதவியை விட்டு விலகுங்க.. விலகிட்டு திமுகவை கடுமையாக விமர்சிங்க.. தவெக கூட்டணியில் நின்னு ஜெயிச்சிட்டு என்ன வேணும்னாலும் பேசுங்க.. வாக்கு முகவர் போட வக்கில்லை. தனியாக நின்றால் எந்த இடத்திலாவது டெபாசிட் வாங்குமா? நான் தோற்றால் கூட 4 விழுக்காடு வைத்து இருக்கிறேன். நீ ஜெயிச்சால் கூட அது வராது" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications