இனி 2 கிட்னி வித்தாலும் பத்தாது போல.. ரூ. 1 லட்சம் வரை உயர்ந்த ஆப்பிள் பொருட்கள்.. தலை சுத்துது

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தாண்டு மெமரி சிப் விலையேற்றம் காரணமாக ஐபோன் விலை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு முன்பே மற்றொரு பேரதிர்ச்சியாக ஆப்பிள் நிறுவனத்தின் இதர தயாரிப்புகளான மேக்புக், ஐபேட் உள்ளிட்ட சாதனங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளான மேக்புக், ஐபேட் மற்றும் ஹோம் பாட் ஆகியவற்றின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. உலகளவில் ஏற்பட்டுள்ள மெமரி சிப் பற்றாக்குறை காரணமாக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று ஆப்பிள் சிஇஓ டிம் குக் ஏற்கனவே எச்சரித்திருந்தார்.

Apple MacBook and iPad prices increased in India

பற்றாக்குறை

இந்த காலத்தில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வருகிறது. ஏஐ சிறப்பாகச் செயல்பட அதிக சக்திவாய்ந்த டேட்டா செண்டர்கள் தேவை. இதனால் உலகின் டாப் மெமரி ஸ்டோரேஜ் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஏஐ நிறுவனங்களுக்கே மெமரி ஸ்டோரேஜ் சப்ளை செய்கிறது. இதனால் செல்போன், லேப்டாப் போன்ற கருவிகளுக்கு மெமரி ஸ்டோரேஜ் கிடைப்பதில்லை.

விலை உயர்வு

இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது காரணமாகச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது பொருட்களின் ரேட்டை ஏற்றியுள்ளது. இந்தியச் சந்தையில் ஆப்பிளின் புதிய மேக்புக் மாடல்களின் விலை ஒரு லட்ச ரூபாய் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இதில் மேக்புக் ஏர் எம்5 முன்பு 1,19,900 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இப்போது அது 1,49,900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.30,000 உயர்த்தப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு லட்சம்

அதுபோலவே மேக்புக் ப்ரோ எம்5 மாடலின் விலை ரூ.70,000 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது 2,39,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அதிநவீன மாடலான மேக்புக் ப்ரோ எம்5 மேக்ஸ் சாதனத்தின் விலை ஒரு லட்ச ரூபாய் வரை அதிகரித்து, தற்போது 4,99,900 ரூபாயை எட்டியுள்ளது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மேக்புக் நியோ மாடலின் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பதிப்பும் 10,000 ரூபாய் உயர்த்தப்பட்டு, 79,900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் 512 ஜிபி வெர்ஷன் விலை தற்போது இந்தியச் சந்தையில் 90,000 ரூபாயாக உள்ளது. வாடிக்கையாளர்கள் இன்னும் பழைய எம்3 அல்லது எம்4 மேக்புக் ஏர் மாடல்களை பல்வேறு ஆன்லைன் இணையதளங்களில் பழைய விலையிலேயே வாங்க முடியும் என்றாலும் அவற்றின் கையிருப்பு மிக விரைவில் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மேக் மினி எம்4 விலையும் 59,900 ரூபாயிலிருந்து தற்போது கிட்டத்தட்ட 95,000 ரூபாயாக மாறியுள்ளது.

ஐபேட்

ஐபேட் சாதனங்களின் விலைகளும் இந்தியாவில் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளன. ஆப்பிளின் அடிப்படை ஐபேட் மாடல் இனி உங்களுக்கு 49,990 ரூபாய்க்கு கிடைக்கும், இது முந்தைய விலையான 34,990 ரூபாயுடன் ஒப்பிடும்போது ரூ.15,000 ரூபாய் அதிகமாகும். அதேபோல் ஐபேட் மினியின் விலை ரூ.20000 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 49,900 ரூபாயிலிருந்து 69,900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஐபேட் ஏர் மாடலின் விலை ரூ.25,000 ரூபாய் உயர்த்தப்பட்டு,64,900 ரூபாயிலிருந்து தற்போது 89,900 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், மிக உயரிய மாடலான ஐபேட் ப்ரோ விலை 39,910 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 99,990 ரூபாயிலிருந்து தற்போது 1,39,900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்பீக்கர்

ஆப்பிளின் ஹோம் பாட் ஸ்பீக்கரின் விலை தற்போது 44,900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.. அதுபோலவே, 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஆப்பிள் டிவி 4கே வைஃபை சாதனத்தின் விலை ரூ.12,000 அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 44,900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் விலையேற்றம் இந்தியாவில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+