ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு பதில் இனி இதுதான் தரப்போறாங்களா.. ஓபிஎஸ் திடுக்கிடும் புகார்
சென்னை: நியாய விலைக் கடைகள் மூலம் தரமான துவரம் பருப்பு வழங்குவதற்கு பதிலாக மஞ்சள் பருப்பை வாங்கி விநியோகிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "நியாய விலைக் கடைகள் மூலம் கூடுதலாக உளுந்தம் பருப்பு வழங்கப்படும், சர்க்கரை வழங்கப்படும் என்றெல்லாம் தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளாக அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த திமுக, ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையிலும், மேற்படி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை..

மாறாக துவரம் பருப்பிற்கு பதிலாக தரமற்ற மஞ்சள் பருப்பை அதிக விலைக்கு வாங்கி வழங்க முயற்சித்து வருகிறது. இதன் மூலம் தங்கள் கருவூலத்தை நிரப்பும் முயற்சியில் திமுக இறங்கியிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் மாதம் ஒன்றிற்கு ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அறுபதாயிரம் டன் துவரம் பருப்பு அல்லது கன்டா மஞ்சள் பருப்பினை வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதாகவும், இதில் குறைந்த விலைப் புள்ளியாக ஒரு நிறுவனம் துவரம் பருப்பிற்கு 134.74 ரூபாய் கோரியதாகவும், மஞ்சள் பருப்பிற்கு 133.75 ரூபாய் கோரியதாகவும், ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளுக்கு முற்றிலும் மாறாக முந்தைய டெண்டரில் பங்கேற்று விநியோகம் செய்ய முடியாத நிறுவனம வேறு ஒரு நிறுவனத்தின் பெயரிரல் பங்கேற்றதாகவும், ஆளும் திமுகவிற்கு வேண்டிய நிறுவனத்திடமிருந்து மஞ்சள் பருப்பை வாங்க திமுக அரசு முடிவெடுத்துள்ளதாகவும், வெளிச்சந்தை மதிப்பான கிலோ 120 ரூபாயை காட்டிலும் கூடுதல் விலை கொடுத்து வாங்க இருப்பதாகவும் இன்று பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துள்ளன.
மேலும் ஒரு மாதத்திற்கு தேவையான ஒப்பந்தப்புள்ளி கோராமல் மூன்று மாதத்திற்கு தேவையான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு அதனை அதிக விலை கொடுத்து வாங்கவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

தரமான துவரம் பருப்பு என்பது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்றும் மஞ்சள் பருப்பு என்பது 50 முதல் 95 கிலோ பருப்பினை கலவை இயந்திரத்தில் கொட்டி சிறிதாக தண்ணீர் ஊற்றி 100 கிலோ பருப்பாக மாற்றப்படுகிறது என்றும் சில நேரங்களில் செயற்கை நிறம் சேர்க்கப்படுகிறது என்றும், இந்தப் பருப்பினை மக்கள் விரும்புவது இல்லை என்றும் கூறப்படுகிறது.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசுக்கு ஏற்படும் இழப்பினை கருத்தில் கொண்டு வெளிப்படையான முறையில் குறைந்த விலையில் தரமான துவரம் பருப்பினை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தரமற்ற மஞ்சள் பருப்பினை வாங்கி வழங்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications