Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதரவாளர்களை அரைபாடி லாரியிலேயே ஏத்தலாம்! ஓபிஎஸ் முன்னே மூனே ஆப்ஷன்தான்! ’அவர்’ தான் முடிவு செய்வார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதல்வராகவும், அதிமுக பொருளாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது எந்த பக்கம் செல்வது என தெரியாமல் தவிர்த்து வருகிறார். ஒரு காலத்தில் அதிமுகவின் அதிகாரம் மையமாக வந்தவர் இன்று ஆதரவாளர்கள் இல்லாமல் தனி மரம் ஆகிவிட்டார் என்று சொல்லலாம். இந்த நிலையில் டிசம்பர் 15ஆம் தேதி வரை அதிமுக தலைமைக்கு அவர் கெடு விதித்து இருக்கிறார். இன்னும் சில நாட்களில் அமித்ஷா தமிழகம் வர இருக்கும் நிலையில் அவரை சந்தித்த பிறகு அடுத்த கட்ட முடிவு குறித்து ஓபிஎஸ் அறிவிப்பார் என்கின்றனர். அதிமுகவில் இணைவதா? தவெகவில் இணைவதா? அல்லது பாஜகவில் இணைவதா? என்ற மூன்று ஆப்ஷன்கள் மட்டுமே ஓபிஎஸ் முன்னர் இருப்பதாக சொல்கின்றனர்.

தமிழக அரசியலில் எப்போதும் அமைதியாக செயல்படுகிறவர் என்ற பெயரைக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம், இப்போது எதைச் செய்யப் போகிறார் என்பதை யாரும் கணிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஒருகாலத்தில் ஜெயலலிதாவால் நம்பிக்கைக்குரிய நபராகக் கருதப்பட்ட ஓபிஎஸ், தனது வீட்டில் முதல்வர் என போர்டு கூட வைக்காமல் தலைமைக்கு கட்டுப்பட்டவராகவும் இருந்தார். அதனால் தான், ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது, அவர் இரண்டு முறை முதல்வராக நியமிக்கப்பட்டார்.

O panneerselvam Amit Shah aiadmk

ஓ பன்னீர்செல்வம்

ஆனால் அதிகாரத்தில் இருந்தபோதும், ஜெயலலிதாவுக்குப் பயந்து தன்னுடைய ஆதரவாளர்களுக்குக் கூட எந்த உதவியையும் செய்யாதவர் என்ற விமர்சனங்கள் அந்நாளிலிருந்தே எழுந்தன. இந்த குணமே இவரை இன்று தனி மரம் போல நிற்க வைத்துவிட்டது. மாறாக, எடப்பாடி பழனிசாமி முற்றிலும் வேறு வழி நடைப்போட்டவர். அதிகாரமும் கட்சியும் தன் கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் காட்டிய உறுதி, அவரை இன்றும் அதிமுகவில் ஒரே தலைவராக நிறுத்தி வைத்துள்ளது. இதுதான் ஓபிஎஸ் - பழனிசாமி இருவரின் அரசியல் வேறுபாட்டையும் வெளிச்சமிடுகிறது.

ஓபிஎஸ் முடிவு

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பாஜகவின் அறிவுரையின்படி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தர்மயுத்தம்" செய்த ஓபிஎஸ், பின்னர் அவர்களால் பலமுறை ஆட்டுவிக்கப்பட்டார். அவர் பாஜகவில் சேரலாம், மாநிலத் தலைவர் பதவி தரப்படும் என்ற பேச்சுகள் கிளம்பியபோதும், ஏதோ காரணங்களால் அந்த வாய்ப்பை அவர் மறுத்துவிட்டார். இதுவே அவரின் அரசியல் பயணத்தில் மிகப்பெரிய தவறாக இன்று பலர் கூறுகின்றனர். 'ஒற்றைத் தலைமை' பிரச்சனை எழுந்தபோது, கட்சியொற்றுமை ன்ற பெயரில் தன்னிடம் இருந்த ஒரு சில ஆதரவாளர்களைம் அவர் இழந்துவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி

இதை எதிர்நோக்கியே எடப்பாடி பழனிசாமி, அவரை நேரடியாக கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். அதன்பிறகு சசிகலா - தினகரன் வரை ஓபிஎஸ்யின் ஆதரவாளர்கள்" போல் தோன்ற ஆரம்பித்தார்கள். அதிமுகவை மீட்பேன் என்று கூறி தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அமைத்த அவர், 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகக்கு எதிராக ராமநாதபுரத்தில் போட்டியிட்டு அதிமுகவை மூன்றாமிடம் தள்ளியதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சம்பவமாக பேசப்பட்டது.

அமித் ஷா

ஆனால் இன்று அவர் மீண்டும் "எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார்" என்று கூறி விண்ணப்பம் கொடுத்தும், பழனிசாமி அதற்கு எந்தப் பதிலும் தரவில்லை. முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது அதிமுக வட்டாரத்தில் அவருக்கு எதிரான கோபத்தை மேலும் அதிகரித்தது. இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா டிசம்பர் முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார் என்ற தகவல் ஓபிஎஸை இன்னும் ஆவலாக்கியுள்ளது.

ஓபிஎஸ் அரசியல் பாதை

அதனால் தான் அவர் "டிசம்பர் 15" என ஒரு காலக்கெடு வைத்துள்ளார் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அன்றே அவர் திமுக கூட்டணியா? தவெகவா? அல்லது பாஜகவா? என்ற முக்கிய முடிவை எடுக்கலாம். இப்போது அரசியல் வட்டாரத்தில் எழும் பெரிய கேள்வி என்னவென்றால், அமித் ஷா தமிழகம் வரும் தருணத்தில், ஓபிஎஸ்ஸின் அரசியல் எதை நோக்கி திரும்புகிறது? என்பது தான். ஆனால், அதை அமித்ஷா தான் முடிவு செய்வார் என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+