முக்குலத்து மக்களின் 7ஆம் படை வீடு பசும்பொன்! எடப்பாடியை எட்டப்பனுடன் ஒப்பிட்டு மருது அழகுராஜ் சாடல்
சென்னை: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் செல்லவுள்ள நிலையில் அவரது பயணத்தை கடுமையாக சாடியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ்.
''காந்தியின் கல்லறைக்கு கோட்சே வருவதும், கட்டப்பொம்முவின் கயத்தாறுக்கு எட்டப்பன் வருவதும், தியாகமே வடிவான பசும்பொன் சித்தர் நினைவிடத்துக்கு துரோகமே தொழிலான எடப்பாடி வருவதும் ஒன்று தான்'' என்று மருது அழகுராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் வெகு விமரிசையாக நடைபெறும். திமுக, அதிமுக, பாஜக,காங்கிரஸ், மதிமுக உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்துவார்கள்.
அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வரும் 30ஆம் தேதி பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் தரப்பு எடப்பாடி பழனிசாமியின் பசும்பொன் விசிட்டை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் விடுத்துள்ள முகநூல் பதிவு வருமாறு;
''முக்குலத்து மக்களின் ஏழாம் படை வீட்டுக்கு எடப்பாடி வருகிறாராமே.. நல்லா வரட்டும்.. காந்தியின் கல்லறைக்கு கோட்சே வருவதும் கட்டப்பொம்முவின் கயத்தாறுக்கு எட்டப்பன் வருவதும் தியாகமே வடிவான பசும்பொன் சித்தர் நினைவிடத்துக்கு துரோகமே தொழிலான எடப்பாடி வருவதும் ஒன்று தான்.''
''ஆனாலும் எடப்பாடி முகத்தை ஏறெடுத்தும் பார்க்காம திரும்பிபடுத்துக் கொள்ளும் தேவரய்யா ஆன்மா.. அப்புறம் அந்த ஆளு வந்து போனதும் டெட்டாயில், பினாயில், லைசால், ஹார்பிக், பிளீச்சிங் பவுடர் எல்லாத்தையும் சேர்த்து கலக்கி அந்த தெய்வீகத் திருவிடத்தை கழுவி விட்டு தீட்டுக் கழிச்சு புனிதப்படுத்துங்க. அது ரொம்ப முக்கியம்.. என்ன நாஞ் சொல்றது..'' இவ்வாறு எடப்பாடி பழனிசாமி மீதான தனது கோபத்தை கொட்டித் தீர்த்துள்ளார் மருது அழகுராஜ்.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications