ஓபிஎஸ், டிடிவி தினகரனை.. ஒரே வார்த்தையில் கைவிட்ட அமித் ஷா.. அருகே சந்தோசமாக அமர்ந்திருந்த எடப்பாடி!
சென்னை:அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடப்போவதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். சென்னையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா - அண்ணாமலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அமித் ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம். 2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது. ஊழலை மறைக்க மும்மொழிக் கொள்கை விவகாரத்தை எழுப்பி திமுக திசை திருப்புகிறது; வரும் தேர்தலில் திமுக ஊழல், பட்டியலின மக்கள், மகளிர் வன்கொடுமை போன்றவை எதிரொலிக்கும். தமிழ்நாட்டில் ரூ.39,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.

ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்னையை திமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் பிரச்னைகளை திசை திருப்ப நீட் தேர்வு விவகாரத்தை பேசுகிறது திமுக. சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் கூட்டணி குறித்து அதிமுக எந்தவித நிபந்தனையும் வைக்கவில்லை.
இணைந்துதான் ஆட்சியமைக்கப் போகிறோம்; கூட்டணி ஆட்சிதான் நடக்கும் தீ எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி அமைகிறது; வெற்றிக்குப் பிறகு மற்றவை முடிவு செய்யப்படும். ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்னையை திமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் பிரச்னைகளை திசை திருப்ப நீட் தேர்வு விவகாரத்தை பேசுகிறது திமுக. எந்த நிபந்தனையும் இன்றி அதிமுக உடன் கூட்டணி. அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது.
அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் எப்போதும் தலையிடப்போவதில்லை. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி, இருவருக்குமே பலனளிக்கக் கூடியது; யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது பற்றி பிறகுதான் பேச இருக்கிறோம்., ஆட்சி அமைப்பது, ஆட்சியில் பங்கு என்பது குறித்து தேர்தலுக்குப் பிறகு ஆலோசித்து முடிவெடுப்போம்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை நயினார் நாகேந்திரனிடம் இருந்தே மட்டுமே பாஜக கட்சி இதுவரை பெற்றுள்ளது. தமிழ்நாடு பாஜக பிரிவு தலைவராக, அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்றதிலும் சரி அல்லது கட்சியின் நிகழ்ச்சிகளை கிராமம் கிராமமாக கொண்டு சென்றதிலும் சரி, அண்ணாமலையின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது..
கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பா.ஜ.க பயன்படுத்திக்கொள்வோம். தேசிய அளவில் அவரை பயன்படுத்திக்கொள்வோம் என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார்.
ஓபிஎஸ்ஸை சந்திக்கவில்லை
உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்துள்ள நிலையில் அவரை சந்திக்க மூத்த தலைவர் ஓ பன்னீர்செல்வம் மாறி மாறி போன் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமித் ஷாவை சந்திக்க சென்னை பிரமுகர் ஒருவர் மூலம் முயன்று உள்ளார்.
டெல்லியில் சந்திக்க நேரம் தரப்படவில்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கவும் நேரம் தரப்படவில்லை. மோடி தமிழ்நாடு வந்த போது நேரம் கேட்டேன். கிடைக்கவில்லை. இப்போது தமிழ்நாடு வந்துள்ள அமித் ஷாவையாவது சந்திக்க நேரம் தர வேண்டும்.. ஏற்பாடு செய்து தாருங்கள்.என்று ஓ பன்னீர்செல்வம் கேட்டுள்ளார். ஆனால் இந்த சந்திப்பிற்கு இதுவரை அமித் ஷா நேரம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
-
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications