முதல்வர் ஸ்டாலின் கொரோனாவிலிருந்து குணமடைய ஓபிஎஸ் வாழ்த்து! எடப்பாடி மவுனம்! அரசியல் நாகரீகம் எங்கே?
சென்னை: கொரோனா தொற்றிலிருந்து முதல்வர் ஸ்டாலின் குணமடைய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஆனால் அதே வேளையில் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழானிசாமி ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு பற்றி, வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் வரை பலரும் முதலமைச்சர் உடல்நலம் பற்றி அக்கறையோடு விசாரித்து வருகின்றனர்.

முதல்வருக்கு கொரோனா
முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது முதல் அரசியல் கட்சித் தலைவர்களும், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரின் உடல்நலம் பற்றி அக்கறையோடு கேட்டறிந்து வருவதோடு விரைவில் நலம்பெற வேண்டும் என்ற தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், பிரதான எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து இப்படி விசாரிப்புகளோ, வாழ்த்தோ வரவில்லை என்பது தான் இங்கு கவனிக்கத்தக்கது. தமிழகத்தில் தழைத்தோங்கி வந்த அரசியல் நாகரீகம் மீண்டும் கற்கால அரசியலை நோக்கி திரும்புகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. இதனிடையே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் நலம் பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.

ஓபிஎஸ் நலம் விசாரிப்பு
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; ''மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து பூரண நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர, எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கிறேன்.'' இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

பாஜக தலைவர்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், ஆளுநர் ரவியும் முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து நலம்பெற வேண்டும் என வாழ்த்துக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக ஆளுநர் ரவி விடுத்த அறிக்கையில், முதல்வர் ஸ்டாலினை வலிமைமிக்க தலைவர் என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications