"பாஜக ஆதரவு.." நிலைப்பாட்டை எடுத்த பிறகும் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி.சண்முகத்தை சந்தித்த ஓபிஎஸ்
சென்னை: ஈரோடு இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு தருமாறு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை சந்தித்து ஓபிஎஸ் ஆதரவு கோரியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. அங்கு திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

அக்கட்சியில் இருந்து மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அதிமுக கூட்டணியில் இருந்து யார் போட்டியிடுவார் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
தேர்தல் கொங்கு மண்டலத்தில் நடக்கும் நிலையில், அதிமுக தனது பலத்தை நிரூபிக்கும் முனைப்பில் தீவிரமாக உள்ளது. இருப்பினும், எடப்படி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் என இரு தரப்பும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனால் ஏற்கனவே குழப்பத்தில் உள்ள தொண்டர்கள் மீண்டும் குழம்பியுள்ளனர். இரு தரப்பும் கூட்டணிக் கட்சிகளைச் சந்தித்து ஆதரவு கோரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்தச் சூழலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு தருமாறு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை சந்தித்து ஓபிஎஸ் ஆதரவு கோரியுள்ளார். சென்னையில் உள்ள புதிய நீதிக்கட்சி அலுவலகத்தில் ஏ.சி.சண்முகத்தை நேரில் சந்தித்தார் ஓபிஎஸ்.
முன்னதாக நேற்றைய தினம் தான் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல் இந்திரா உள்ளிட்டோர் ஏ.சி.சண்முகத்தை சந்தித்து ஆதரவு கோரியிருந்தனர்.
இருப்பினும், எடப்பாடி பழனிசாமி தரப்பு விடுத்திருந்த கோரிக்கை நிராகரித்த ஏ.சி.சண்முகம், பாஜக இருக்கும் பக்கமே தான் இருப்பேன் என்றும் பாஜக எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்றும் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
-
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications