ஓபிஎஸ் சொன்ன வார்த்தை.. இணை ஒருங்கிணைப்பாளர் பெயர்.. துரோகி..துரோகி என கோஷமிட்ட நிர்வாகிகள்!
எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லாமல் இணை ஒருங்கிணைப்பாளர் என்று மட்டும் ஓ பன்னீர் செல்வம் கூறியபோது அவரது ஆதரவாளர்கள் அரங்கம் அதிர துரோகி துரோகி என கோஷம் எழுப்பினர்.
சென்னை: சென்னை எழும்பூரில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அணியினரின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லாமல் இணை ஒருங்கிணைப்பாளர் என்று மட்டும் ஓபிஎஸ் கூறினார். உடனே அவரது ஆதரவாளர்கள் அரங்கம் அதிர துரோகி துரோகி என கோஷம் எழுப்பினர்.
சென்னை எழும்பூரில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அணியினரின் மாவட்ட செயலாளர்கள் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுகவின் சட்ட விதிகளை எந்த அளவுக்கு சிதைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு சிதைத்து தான் கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில் நாங்கள் ஒருங்கிணைந்து 23 தீர்மானங்களை வடிவமைத்து, அதை நிறைவேற்றும் பொதுக்குழுவாக அந்த பொதுக்குழு அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது.

23 தீர்மானங்களும் ரத்து..
அந்த பொதுக்குழுவை தற்காலிகமாக தலைமை தாங்குகின்ற தமிழ்மகன் உசேனை நான் முன்மொழிய, இணை ஒருங்கிணைப்பாளர் வழிமொழிய அந்த கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது, சர்வாதிகார உச்சநிலைக்கு சென்று எவ்வித முன் அறிவிப்பும் இன்றி 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்கள். பொருளாளர் என்ற முறையில் வரவு செலவு கணக்குகளை நான் சமர்பிப்பதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் பல்வேறு அராஜகங்கள் நடைபெற்றது.

அன்றைக்கே இழந்துவிட்டார்
இதை நாட்டு மக்களும் டிவி மூலமாக பார்த்தனர்.. அந்த அளவிற்கு அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். நான் அவரது பெயரை உச்சரிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அந்த தகுதியை அவர் அன்றைக்கே இழந்துவிட்டார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கடைபிடித்த அதிமுக சட்ட விதியை காப்பாற்ற வேண்டும் என்றே இரண்டாவது தர்ம யுத்தம் தொடங்கியிருக்கிறது. உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தீர்ப்புக்கு எதிராகத்தான் உச்ச நீதிமன்றம் சென்று இருக்கிறோம்.

துரோகி துரோகி என கூச்சல்
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர்... என்று பெயரை சொல்லாமல் ஒபிஎஸ் தவிர்த்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் துரோகி துரோகி என கூச்சலிட்டனர்.முன்னதாக ஓ பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மார்ச் மாதம் நடத்துவது என
அதில், அ.தி.மு.க. என்னும் தொண்டர்கள் இயக்கத்தை, மக்கள் இயக்கத்தை, சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்பது. அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் எனத் தீர்மானிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மற்றும் அ.தி.மு.க.வின் பொன் விழா என முப்பெரும் விழாவினை 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது" போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications