தட்கல் எதற்கு, புக்கிங் எதற்கு .. எக்குத்தப்பான எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் பயணம்.. பெண் வீடியோ
சென்னை: ஸ்லீப்பர் ரயில் பெட்டியில் புக்கிங் செய்தவர்களை ஏறவிடாமல் பொதுப்பெட்டி பயணிக்க டிக்கெட் எடுத்தவர்கள், டிக்கெட்டே எடுக்காதவர்கள் ஒகா- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த பெண் பயணி ஒருவர் ரயில் நம்பர் 16337 ரயிலில் எஸ் 1 பெட்டியில் என்ன நடக்கிறது என்று பாருங்கள் என்று வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா என்பது போல் ஐஆர்சிடிசி வெப்சைட்டுக்கும், இந்தியன் ரயில்வேக்கும் கும்பிடு போடுகிறார்கள் முன்பதிவு செய்த பயணிகள். சாமானியர்களுக்கு போதிய ரயில் வசதிகள் இல்லாத காரணத்தால், முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறிக்கொள்கிறார்கள் வடமாநில கூலித்தொழிலாளர்கள்.. இதனால் முன்பதிவு செய்து பயணிக்க குடும்பத்தோடு சென்றவர்கள், நம்ம புக் செய்த ரயிலா இது என்று அதிர்ச்சி அடைகிறார்கள்.

ரயிலில் ஏற வேண்டும் என்ற எண்ணத்தையே மறக்கடிக்கும் வகையில் எல்லா முன்பதிவு பெட்டியிலும், முன்பதிவு செய்யாத பயணிகள் ஏற தொடங்க விட்டார்கள். ஆம்னி பேருந்துகளில் நினைத்து பார்க்க முடியாத கட்டணம், பேருந்தகளில் பயணிக்கவும் கணிசமான கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ரயிலில் மட்டும் தான் மிககுறைந்த கட்டணத்தில் 1000, 2000 கிமீ தூரம் எளிதாக பயணிக்க முடியும்.
வடமாநிலத்திற்கு தென் மாநிலத்திற்கும் இடையே முற்றிலும் முன்பதிவு இல்லாத ரயில்களை கூலித் தொழிலாளர்களுக்காக அதிக அளவில் இயக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். ஆனால் இந்திய ரயில்வே இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால், முன்பதிவு செய்து ரயிலில் பயணிக்க வேண்டிய அவசியமே இல்லை என்கிற அளவிற்கு நிலைமை மாறி வருகிறது.
தட்கலில் புக்கிங் செய்தால், சில நொடிகளில் ரயில்களில வெயிட்டிங் லிஸ்ட் வருவது, 3 மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்தால் தான் டிக்கெட் என்ற நிலையை மாற்ற வேண்டிய ரயில்வே அமைச்சகம், அதற்காக ஏழைகளுக்கான ரயில்களையும், ஸ்லீப்பர் கோச்சுகளையும் அதிக அளவில் விட வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக ஏழைகளால் எட்டிக்கூட பார்க்க முடியாத ரயில்கள் தான் அண்மை காலங்களில் இங்கு அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இதன் எதிரொலியாகவே முன்பதிவு செய்யாத பயணிகள், முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறும் நிலை இருக்கிறது..
ஓகா- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் வாரந்திர ரயில் ஆகும்.இந்த ரயில் கேரளாவின் எர்ணாகுளத்தில் (கொச்சி) இருந்து புறப்பட்டு, திருச்சூர், கோழிக்கோடு, காசர்கோடு, மங்களூர், உடுப்பு வழியாக கோவா செல்லும், அப்படி மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் நுழைந்து மும்பை பக்கத்தில் போய், அதன்பின்னர், குஜராத் மாநிலத்தின் சூரத், ராஜ்கோட், அஹமதாபாத் வழியாக ஓகா செல்லும்.இந்த ரயில் மொத்தம் 44 மணி நேரம் 5 நிமிடம் செல்லும். மொத்தம் 2557 கிலோ மீட்டர் தூரம் செல்லும் இந்த ரயில் ஓகாவில் இருந்து மீண்டும் எர்ணாகுளம் திரும்பும். மொத்தம் 3.5 நாட்கள் செல்லும் இந்த ரயில் முழுமையாக அரபிக்கடலை ஒட்டியுள்ள கொங்கன் ரயில் பாதையில் செல்லும். மொத்தம் 50 ரயில் நிலையங்களில் இந்த ஓகா எர்ணாகுளம் எக்ஸிபிரஸ் ரயில் நின்று செல்லும்.
இந்த ரயிலில் நின்று கொண்டே பயணிக்க முடியுமா என்பதை யோசித்து பாருங்கள். அதுவும் முன்பதிவு செய்த பயணிகள், பயணிக்க இடமே இல்லாமல் பயணிக்க வேண்டிய நிலை மிக கொடுமையானது. அப்படியான ஒரு நிலையை பெண் பயணி ஒருவர் சந்தித்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் பயணி வெளியிட்டுள்ள வீடியோவில், "இங்கு எஸ்1 ஸ்லீப்பர் கோச்சின் முன்பதிவு செய்த பெட்டியில், முன்பதிவு செய்யாத பயணிகள் பலர் ஏறி இருக்கிறார்கள்.. ஜெனரல் கோச்சில் போக வேண்டிய பலர் இதில் ஏறி அமர்ந்திருக்கிறார்கள்.. ஐஆர்சிடிசியில் இது தொடர்பாக உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தேன்.ஆனால் அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை. நாங்கள் பயணிக்கு ரயில் எண் 16337 (ஓகோ எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்).
TranslateMom has subtitled your video in English!
— TranslateMom (@TranslateMom) June 11, 2024
For instant translations and captions, visit our web app at https://t.co/vgpywdv6o6.
Tool created by @montakaoh. pic.twitter.com/TKGY3Ov75Y
எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.. ஜெனரல் கோட்டாவில் புக்கிங் செய்த பெட்டியில் ஏறிக்கொண்டு இறங்க மறுக்கிறார்கள்.. மொத்த ரயிலும் முன்பதிவு செய்யாத பயணிகளால் நிரம்பி வழிகிறது. யாரும் கால்களை நகர்த்தக்கூட முடியாத அளவிற்கு நிலைமை உள்ளது. இவர்கள் எப்படி உட்கார்ந்துள்ளார்கள் என்பதை பாருங்கள்.. கும்பலாக அமர்ந்து அடவாடி செய்து வருகிறார்கள்.. என்னவெல்லாம் பண்ண முடியுமா அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.. இதெல்லாம் சரிதானா" இவ்வாறு அந்த பெண் பயணி கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications