சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முழு ஸ்பீடில்.. திடீரென ரிவர்ஸ் கியரில் தறிகெட்டு ஓடிய ஓலா இ பைக்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Google Oneindia Tamil News

சென்னை: ஓலா பைக் ஒன்று சமீபத்தில் திடீரென ரிவர்ஸ் கியரில் தானாக பின்னோக்கி சென்று விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக நாடு முழுக்க பல்வேறு இ பைக்குகள் தீ பற்றி எரிய தொடங்கி உள்ளன. ஓலா நிறுவனம் தொடங்கி பல்வேறு நிறுவனத்தின் பைக்குகள் திடீரென தீ பற்றி எரிகின்றன. அல்லது வெடித்து சிதறுகின்றன.

நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் உள்ளது. இப்போது பலர் இ பைக் வாங்க விரும்பி வரும் நிலையில்தான் தொடர் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 இம்சை கொடுக்கும் இ-பைக்ஸ்? புத்தம் புதிய ஓலா பைக்கை கொளுத்திய பிசியோதெரபிஸ்ட்! என்ன காரணம் தெரியுமா? இம்சை கொடுக்கும் இ-பைக்ஸ்? புத்தம் புதிய ஓலா பைக்கை கொளுத்திய பிசியோதெரபிஸ்ட்! என்ன காரணம் தெரியுமா?

ஓலா பைக்

ஓலா பைக்

சமீபத்தில் கூட ஓலா பைக்கை இளைஞர் ஒருவர் தீ வைத்து எரித்தார். முழுமையாக சார்ஜ் போட்டு சில கிலோ மீட்டர் போன போதே நடு சாலையில், அந்த பைக் சார்ஜ் இல்லாமல் நின்றது. தொடர்ந்து இப்படி அடிக்கடி சம்பவம் நடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர்.. பைக்கை தீ வைத்து கொளுத்தினார். இந்நிலையில் தான் ஓலா நிறுவனம் சார்பில் 1441 மின்சார பைக்குகள் திரும்ப பெறப்பபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆய்வு

ஆய்வு

திரும்ப பெறும் இந்த ஸ்கூட்டர்களை நிறுவனத்தின் சர்வீஸ் என்ஜினியர்கள் முழுவதுமாக பரிசோதிக்க உள்ளனர். இந்த நிலையில்தான் ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவருக்கு நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த பல்லவ மகேஸ்வரி என்ற இளைஞர் சில வாரங்களுக்கு முன் ஓலா S1 Pro scooter மாடலை வாங்கினார். கடந்த ஜனவரி 15ம் தேதி இவர் ஓலா பைக்கை வாங்கி உள்ளார். அப்போது ஓலா பைக் மீது பெரிதா புகார்கள் இல்லை.

பின்னாடி சென்றது

பின்னாடி சென்றது

ஓலா பைக்கில் ரிவர்ஸ் கியர் உள்ளது. இ பைக் என்பதால் கியரை மாற்ற, காரை பின் பக்கம் கொண்டு செல்வது போல பைக்கை பின் நோக்கி கொண்டு செல்ல முடியும். ஆனால் அவர் பைக் வாங்கிய சில நாட்களில் நின்று கொண்டு இருந்த பைக் திடீரென பின்னோக்கி சென்றுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக பைக் வேகம் எடுத்த நிலையில், திடீரென சுதாரித்து பைக்கை நிறுத்தி இருக்கிறார். இது மீண்டும் நடக்காது என்று அவர் நம்பி இருக்கிறார்.

மீண்டும்

மீண்டும்

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பல்லவ மகேஸ்வரியின் தந்தை ஓலா S1 Pro scooterயை எடுத்திக்கொண்டு வெளியே சென்றுள்ளார். வெளியே இவர் பைக்கை பார்க் செய்யும் போது திடீரென அது ரிவர்ஸ் கியருக்கு சென்றுள்ளது. வேகமாக ரிவர்ஸ் கியரில் பின்னோக்கி முழு ஸ்பீடில் சென்றுள்ளது... அதோடு நிற்காமல் பின்னால் இருந்த சுவற்றில் டமார் என்று மோதியுள்ளது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. பைக் வேகமாக பின்னால் இருந்த சுவற்றில் மோதி உள்ளது. இதில் அவரின் மண்டை உடைந்துள்ளது.

மண்டை உடைந்தது

மண்டை உடைந்தது

அதில் 10 தையல் போடப்பட்டுள்ளது. அதேபோல் இவரின் இடது கை உடைந்துவிட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது 2 பிளேட் கைகளில் வைக்கப்பட்டு உள்ளது. அவருக்கு 65 வயதாகிறது.. ஓலாவில் இருக்கும் தவறால் என் அப்பா படுத்தப்படுகையாக இருக்கிறார் என்று பல்லவ மகேஸ்வரி பேஸ்புக்கில் குற்றஞ்சாட்டி உள்ளார். உடனே இதை சரி செய்யுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஓலா பைக்கில் இப்படி அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Ola E-bike went in reverse at full speed: Man revealed about the bizarre incident. ஓலா பைக் ஒன்று சமீபத்தில் திடீரென ரிவர்ஸ் கியரில் தானாக பின்னோக்கி சென்று விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X