பழைய ஓய்வூதியம் திட்டத்தை உடனே செயல்படுத்த முடியும்.. அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சொல்லும் மாற்றுவழி
சென்னை: பழைய ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்த போகிறதா இல்லையா என்பதை இதுவரை திமுக அரசு அறிவிக்கவில்லை.. முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, எதிர்க்கட்சியாக இருந்த திமுக, பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பரிசீலிப்போம்.. அது தொடர்பாக நிபுணர் குழு அமைத்து முடிவு செய்வோம் என்றது. இந்நிலையில் நான்கு வருடம் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை... இந்நிலையில் பழைய ஓய்வூதியம் திட்டத்தை உடனே செயல்படுத்த முடியும் என்று அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மாற்று வழிகளை கூறியுள்ளது.அதுபற்றி பார்ப்போம்.
கடந்த 2003-ம் ஆண்டு இந்தியா முழுவதுமே பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, 2004 ஜன. 1-ம் தேதிமுதல் புதிய ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டது. இதே நடைமுறையில் தமிழக அரசும் புதிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தியது. ஆனால் அதற்கு முன்னதாக பழைய ஓய்வூதிய திட்டப்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு கடைசி சம்பளத்தில் 50 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. இது தவிர பணவீக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதியத்தில் மாற்றங்களும் செய்யப்பட்டு வந்தது.

அரசு ஊழியர்கள் சம்பளம்
இதன்படி பார்த்தால் ஒருவரின் ஆண்டுச் சம்பளம் 15 லட்சம் ரூபாய் பெறுகிறார் என்றால், அவர்களின் மாத ஓய்வூதியம் சுமார் 62,500 ரூபாயாக இருக்கும். ஆண்டுக்கு 15 லட்சத்தில் 50% = 7.5 லட்சம் ரூபாய் அதாவது மாதம் 62,500 ரூபாய் என்கிற அளவில் இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர் தனது வாழ்நாள் முழுவதும் இந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி அக விலைப் படி உயர்வுக்கு ஏற்ப இந்த தொகை அவ்வப்போது ஓய்வூதியதார்களுக்கு ஓய்வூதியம் அதிகரித்து வந்தது.
புதிய ஓய்வூதியம் சவாலானது
இந்த பழைய ஓய்வூதியம் என்பது 2003ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு இப்போதும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் 2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியம் தான் நடைமுறையில் இருக்கிறது. இந்த புதிய ஓய்வூதியம் என்பது பெரிய அளவில் ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இல்லை. ஏனெனில் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சரியான தொகையை கணிப்பது கடினமாக உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை விட மிக குறைவாகவே கிடைத்து வருகிறது. மேலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அகவிலைப் படியின் படி உயர்வு இருக்காது . இதனால் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி
இது தொடர்பாக வழக்கு ஒன்றில் அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கியமான ஒருகேள்வியை எழுப்பியது.அதன்படி, அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது அல்லது புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கான விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள உறுதியான முடிவுகள் என்ன என்பதைக் குறித்துத் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. அனேகமாகஅடுத்த விசாரணையில் நிலவரம் என்னவென்று தெரியவரும்.
அரசு ஊழியர்கள் போராட்டம்
இதனிடையே சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலகம் வளாகத்தில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினரும் அரசு ஆசிரியர் மற்றும் பணியாளர் அமைப்பினரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஜாக்டோ-ஜியோ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மு. பாஸ்கரன் கூறும் போது, அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற போராட்டங்களில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்" என்று கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை
ஆனால் ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலான காலம் கடந்த பிறகும், பழைய ஓய்வூதியத் திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்ற வாக்குறுதியையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி, செவிலியர்கள், நூலகர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளின் சிறப்பு ஊதியமும் மதிப்பூதியமும் வழங்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல அரசாணைகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை.
பழைய ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்த மாற்றுவழி
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஓய்வூதியத்திற்காக 10% பிடித்தம் செய்யப்பட்டது, அதிமுக-திமுக மாறி மாறி ஆட்சி செய்த 23 ஆண்டுகளிலும் அந்த தொகை திருப்பி வழங்கப்படவில்லை. பிடித்தம் செய்யப்பட்ட 84,000 கோடி ரூபாயில், 42,000 கோடியை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்பட வேண்டும். மீதமுள்ள 42,000 கோடி எல்ஐசி கணக்கில் செலுத்தலாம். இப்படி செய்வதன்
மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த முடியும். எங்களது நியாயமான கோரிக்கைகளை முதலமைச்சர் உடனடியாக தீர்க்க வேண்டும்; இல்லையெனில் ஜாக்டோ-ஜியோ மாபெரும் குழுவை அமைத்து அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை அறிவிப்போம்" இவ்வாறு கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications