பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் தமிழக அரசு ஊழியர்களுக்கு? ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், அரசு தொடர்ந்து அமைதி காத்தபடி உள்ளதால், பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த 1.4.2003 முதல் ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதை, அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் 22 ஆண்டுகளாக கடுமையாக எதிர்த்து போராடி வருகின்றன.

மத்திய அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், திமுக தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
பழைய ஓய்வூதிய திட்ட பலன்கள்
இதற்கு காரணம், புதிய ஓய்வூதியம் பழைய ஓய்வூதியத்துக்கு ஈடாகாது, பழைய திட்டத்தில் 10 வருடங்கள் பணிக்கு மத்திய அரசிலும், 30 ஆண்டுகள் பணிக்கு மாநிலத்திலும் 50% சம்பளம் உத்தரவாத ஓய்வூதியமாகக் கிடைக்கிறது. கம்யூட்டேஷன், குடும்ப ஓய்வூதியமும் கிடைக்கிறது. மேலும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக மத்திய அரசில் ரூ.9,000, மாநிலத்தில் ரூ.7,850 கிடைக்கிறது. 80 வயதுக்கு மேல் 100 வயதுவரை கிடைக்கும் கூடுதல் ஓய்வூதியம், ஊதியக் குழு வரும்போது ஓய்வூதிய உயர்வு, அகவிலைப்படி போன்றவை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பவை. புதிய திட்டத்தில் கிடையாது. எனவேதான் பழைய ஓய்வூதியத்தையே வலியுறுத்தி வருகிறார்கள்.
புதிய ஓய்வூதிய திட்டமே சிறப்பு
இதனிடையே, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த கோரி ஆசிரியர் ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு 4 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான வழக்கில் புதிய ஓய்வூதிய திட்டமே சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், மேலும், கடந்த 2003 ஏப்ரலுக்கு பிறகு பணியில் சேர்ந்து, அக்டோபர் வரை ஓய்வு பெற்ற, 54,000 பேரில் 51,000 பேருக்கு, முழுமையான பலன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்ய தயாராக இருப்பதாகவும் தமிழக நிதித்துறை செயலர் தரப்பில் நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது..
அன்புமணி காட்டம்
ஆனால் இதனை பாமக கண்டித்துள்ளது.. திமுக சொல்வது அப்பட்டமான பொய். புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்தவர்களில், கடந்த அக்டோபர் வரை 54,000 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு கூட, ஓய்வூதியம் வழங்கவில்லை. ஆட்சிக்கு வர காரணமாக இருந்த, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், இதை விட மோசமான துரோகத்தை, திமுகவால் செய்ய முடியாது என்று காட்டமாக விமர்சித்திருந்தார் பாமக தலைவர் அன்புமணி.
ஜாக்டோ ஜியோ மீண்டும் போராட்டம்
இந்நிலையில், ஜாக்டோ ஜியோ மீண்டும் தன்னுடைய போராட்டத்தை அறிவித்துள்ளது.. கடந்த நவம்பர் 18-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, அரசு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்புவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைவது, சிறப்புக் காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
நேற்றைய தினம் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் மு.பாஸ்கரன், சே.பிரபாகரன், இலா.தியோடர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று, அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
உண்ணாவிரத போராட்ட தேதி அறிவிப்பு
கூட்ட முடிவில் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி வட்டார அளவில் பிரச்சார இயக்கமும், டிசம்பர் 13ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாநிலை போராட்டமும் நடைபெறும்.
இதைத்தொடர்ந்து டிசம்பர் 27ல் மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடும் அதன் தொடர்ச்சியாக ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெறும்" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications