கவலையா இருக்கு.. சீனாவில் என்ன நடக்கிறது?.. "ஹூ" தலைவர் வெளியிட்ட எச்சரிக்கை.. பயமுறுத்தும் கொரோனா
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கடந்த வருடம் தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தற்போது மேலும் உருமாற்றம் அடைந்து சீனாவில் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை அகற்றிய பின்தான் கேஸ்கள் அதிகரித்து உள்ளன. ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா காரணமாக சீனாவில் தினசரி கேஸ்கள் 4 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளது.
ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா இந்தியாவிலும் பரவி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்த வகை கொரோனா காரணமாக இதுவரை 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஏற்கனவே கடந்த நவம்பருக்கு முன்பாகவே குணமடைந்துவிட்டனர்.

சீனா கொரோனா
சீனாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. உலக சுகாதார மைய தலைவர் டெட்ராஸ் ஆதனம் அளித்துள்ள பேட்டியில், இந்த கொரோனா பரவல் குறித்த விவரங்களை சீனா தொடர்ந்து எங்களிடம் வெளியிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அதேபோல் இந்த பரவல் தொடர்பாக சோதனை நடத்தவும் சீனா எங்களுக்கு அனுமதி தரும் என்று நினைக்கிறோம். இதை பற்றி நாங்கள் ஆராய்ச்சி செய்து வருகிறோம்.

கொரோனா தடுப்பு
கொரோனா எப்படி தோன்றியது என்பது இன்னும் தெரியவில்லை. இதை பற்றி அனைத்து விதமான வாதங்களையும் புறக்கணிக்காமல் நாங்கள் ஆலோசனை செய்து வருகிறோம். இப்போது கொரோனாவின் தீவிரம் குறித்து அறிய வேண்டும், களத்தில் என்ன நிலைமை இருக்கிறது என்று அறிய வேண்டும். அதற்கு இந்த நோய் மூலம் பாதிக்கப்படும் நபர்களின் உடல்நிலை, அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் நிலை, எத்தனை பேர் ஐசியூவில் இருக்கிறார்கள் என்பது போன்ற விவரங்கள் தேவை.

உதவி
சீனாவிற்கு தேவையான உதவிகளை செய்ய நாங்கள் தயார். சீனாவிற்கு வேக்சின் தொடர்பான உதவிகளை செய்வதற்கு தயாராக இருக்கிறோம். அவர்களின் சுகாதாரத்தை பாதுகாக்க தயாராகி இருக்கிறோம். இந்த வருடம் கொரோனா வெகுவாக குறைந்தது. இதனால் அடுத்த வருடம் கொரோனா முடிவிற்கு வர வாய்ப்புகள் உள்ளன. கடந்த வருத்தத்தோடு ஒப்பிடும் போது கொரோனாவை பொறுத்தவரை நாம் நல்ல நிலையில்தான் இருக்கிறோம். இப்போது நிலைமை உலக அளவில் நன்றாகவே இருக்கிறது.

ஐநா
கடந்த ஜனவரியில் இருந்து கொரோனா கேஸ்கள் குறைவாகவே இருந்தனர். கொரோனா மரணங்களும் 90 சதவிகிதம் குறைத்து உள்ளது. ஆனால் இந்த பெருந்தொற்று இன்னும் முடியவில்லை. இன்னும் பெருந்தொற்று முடித்துவிட்டு என்று சொல்வதற்கான காலம் வெகுதொலைவில் உள்ளது. இந்த வைரஸ் எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். அதை தீவிரமாக கவனிக்க வேண்டும். எல்லோருக்கும் கண்டிப்பாக வேக்சின் போட வேண்டும்.

மரணங்கள்
கொரோனா காரணமாக இனியும் தேவையற்ற மரணங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எல்லோருக்கும் மருத்துவம் சென்ற சேர வேண்டும். சீனாவில் கேஸ்கள் அதிகரிக்க கூடியதற்கு போதுமான அளவில் வேக்சின் கொடுக்கப்படாதது காரணம். மக்கள் எல்லோருக்கும் மருத்துவம் சென்று சேராதது காரணம். சீனாவில் தற்போது இருக்கும் நிலை கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. அவர்கள் நாட்டில் கேஸ்கள் அதிகரிப்பது வருத்தம் அளிக்க கூடிய விஷயமாக உள்ளது என்று உலக சுகாதார மைய தலைவர் டெட்ராஸ் ஆதனம் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
