தமிழகத்தில் ஊரடங்கு, கட்டுப்பாடுகள் அதிகரிப்பா?முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. இதனால் அரசும், மக்களும் நிம்மதியாக இருந்த நிலையில் ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த மாத தொடக்கத்தில் பாதிப்பு 700-க்குள் இருந்த நிலையில் தற்போது 1700-ஐ கடந்து விட்டது. ஓமிக்ரான் வைரசும் 120-ஐ கடந்து விட்டது. சென்னையில் தினம்தோறும் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகி வருகிறது.

கொரோனா அதிவேகம்
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10,634 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, கோவை., திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.

பல்வேறு கட்டுப்பாடுகள்
நிலைமை இப்படி இருக்க ஏற்கனவே ஜனவரி 10ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார் இத்துடன் சேர்த்து பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டன. அனைத்து பள்ளிகளிலும், வருகிற 10-ம் தேதி வரை 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

பள்ளிகள்
மேலும், மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் மெட்ரோ ரயில்களில் 50% பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி, ஜிம்கள், ஹோட்டல்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் ஆகியவற்றில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி என்ற பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
Recommended Video

முதல்வர் இன்று ஆலோசனை
இந்த நிலையில் தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிவேமாக உயரும் நிலையில் ஒமைக்ரான் தடுப்பு பணிகள் குறித்து உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தின் முக்கிய பண்டிகையான பொங்கல் நெருங்கி வரும் நிலையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மருத்துவ துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த கூட்டத்துக்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications