ஸ்டிரைக் அறிவித்த ஆம்னி பேருந்து சங்கம்! 5 மாநிலங்களில் வண்டி ஓடாது! வரி விதிப்பு அநியாயமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த ஆம்னி பேருந்துகள், கேரளாவில் விதிமீறலில் ஈடுபட்டதால் லட்சக்கணக்கில் அபராதம் வாங்கியிருந்தன. இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் இனி ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கர்நாடகாவில் தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு தலா ரூ.2 லட்சம் சாலை வரி விதிக்கப்பட்டு, 40 பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டு இருக்கிறது என்றும், ஆந்திராவிலும் 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனவும், தமிழக பதிவு எண் கொண்ட 50% பேருந்துகளை பிற மாநிலங்களுக்கு இயக்க முடியாத சூழல் உள்ளது. எனவே ஆம்னி பேருந்துகளுக்கான தனிவகை பர்மிட் உருவாக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு ஆம்னி பேருந்துகள் சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறது.

Omni bus tamil nadu

இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "இந்தியாவின் எல்லா விஷயங்களிலும் முன்னோடியாக செயல்படும் தமிழக அரசு மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா உடன் பேசி அந்த மாநில பேருந்துகளுக்கும் சாலை வரியில் விலக்களித்து அண்டை மாநிலங்களுக்கு சீராகப் பேருந்துகள் இயக்க வழி வகையை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என கூறியிருக்கிறது.

ஆனால் ஆம்னி பஸ் விவகாரத்தில் சாமானிய மக்கள் சில கேள்விகளை கேட்டிருக்கின்றனர். கோயம்பேடு பஸ் நிலையம் காலி செய்யப்பட்டு, அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை கொண்டு செல்லப்பட்டபோது, ஆம்னி பேருந்துகள் மட்டும் அடம்பிடித்தது. அரசு கறாராக சொன்னபோதும் நீதிமன்றம் வரை சென்று தனி சலுகை வாங்கி கோயம்பேடு வரை பேருந்துகளை இயக்கியது.

மட்டுமல்லாது பொங்கல், தீபாவளி, தொடர் விடுமுறை நாட்களில் விமானத்திற்கு இணையாக கட்டணத்தை உயர்த்தி சாமானியர்களின் வயிற்றில் அடித்த ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு தமிழக அரசு ஏன் உதவ வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+