சென்னைக்கே ஆச்சர்யம்.. 5 வருச கனவு சார்.. ஓஎம்ஆர் பைபாஸ் சாலையில் சட்டென மாறுதே எல்லாம்
சென்னை: திருப்போரூர் அருகே களவாக்கத்தை தண்டலத்துடன் இணைக்கும் 7.45 கிமீ ஆறு வழிச்சாலையான ஓஎம்ஆர் பைபாஸ் திட்டம்-2 பல தாமதங்களை கடந்து தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் அருகிலேயே புகழ்பெற்ற சுற்றுலாதலமான வொண்டர்லாவும் வருகிறது.
சென்னை மாநகரில் தான் ஒரு காலத்தில் நெரிசல் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்றாலே புறநகர் பகுதிகள் தான் என்கிற அளவிற்கு மாறி உள்ளது.குறிப்பா சென்ன ஓஎம்ஆர் சாலையை பற்றி சொல்ல வேண்டாம்.சென்னையின் ஐடி காரிடர் பகுதியான இந்த சாலை சென்னை நகருக்குள் மட்டுமல்ல,புறநகர் பகுதியிலும் கடும் போக்குவரத்து நெரிசலால் திணறுகிறது.

இந்த நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், கேளம்பாக்கம் மற்றும் திருப்போரூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் இரண்டு பைபாஸ் சாலைகள் கட்டமைக்க தமிழக அரசு கடந்த 2017ம் ஆண்டு முடிவு செய்தது. இதற்காக 247 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதன் பணிகள் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகத்தின் (TNRDC) மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு தொடக்கப்பட்டது. கடந்த 2020க்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.
திருப்போரூர் பைபாஸ் சாலை 7.45 கிலோமீட்டர் தூரம் வரை அமைக்கக முடிவு செய்யப்பட்டது. அதாவது காளவாக்கம் மற்றும் தண்டலம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில சாலை அமைக்கப்பட்டது..இந்த சாலை அமைத்த பிறகு திருப்போரூர் ஜங்ஷனிற்கு செல்ல தேவையில்லை என்றும் கூறப்பட்டது.
அதற்கேற்ப பைபாஸ் சாலை கட்டமைக்கப்பட்டது. பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்புடன் நடந்து வந்தது. ஆனால் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடக்கவில்லை. மீண்டும் இயல்பு நிலை திரும்பிய போதும் பணிகள் வேகமெடுக்காமல் இருந்து வந்தது. ஆமை வேகத்தில் மட்டுமே பணிகள் நடந்து வந்தது. திட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் இணைப்பு சாலை பணிகள் மட்டும் நிறைவு பெறாத நிலையிலேயே இருந்தது.
பைபாஸ் சாலையில் 6 வழித்தடங்களை அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் 2 வழித்தடங்களில் மட்டும் பெரும்பாலான பகுதிகள் போடப்பட்டிருந்தன. மற்ற பகுதிகளில் போடப்படவில்லை. ஆனாலும் அறைகுறையான சாலையில் ஓஎம்ஆர் குடியிருப்புவாசிகள் பயணித்து வந்தனர். கேளம்பாக்கம் பகுதியில் இருந்து திருப்போரூர் வரை செல்ல பலரும் பயன்படுத்தினர் பீக் ஹவர்கள், வார இறுதி நாட்கள், பண்டிகை காலங்களில் மாற்று வழித்தடமாக இப்போது மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
இந்த சூழலில் கேளம்பாக்கம் திருப்போரூர் மக்களுக்கு இப்போது நடந்து வரும் மாற்றங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காளவாக்கத்தை தண்டலத்துடன் இணைக்கும் 7.45 கிமீ ஆறு வழிச்சாலை பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன.பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த மாற்றம் காரணமாக விரைவில் பணிகள் முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இதனிடையே பைபாஸ் சாலையில் புகழ்பெற்ற சுற்றுலாதலமான வொண்டர்லாவும் வருகிறதாம்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications