"அலட்சியத்தின் விலை".. அரசுப் பேருந்து மோதி.. துடி துடித்து பலியான பிஞ்சு.. சென்னையில் பரிதாபம்
அலட்சியத்தின் காரணமாக சென்னையில் பேருந்து மோதி குழந்தை உயிரிழந்திருக்கிறது.
சென்னை: சென்னையில் அரசுப் பேருந்து மோதி தந்தை கண் முன்பே ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
ஒரு மிகச்சிறிய அலட்சியத்தின் காரணமாகவே இந்த கோர விபத்து நிகழ்ந்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது, பெற்றோர் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக மாறியுள்ளது.
சிறு குழந்தைகளை எப்போதும் பெற்றோர் தங்கள் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் வைத்திருக்க வேண்டும் என்பதற்கு இந்த சோக சம்பவம் உணர்த்தியுள்ளது.

ஒரு நொடிதான்..
பொதுவாக, பிறந்த புதிதில் குழந்தைகளை பார்ப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் கிடையாது. குழந்தையின் பசிக்கு பாலூட்டி, அதை தூங்க வைப்பதே தாய்மார்களின் வேலையாக இருக்கும். ஆனால், குழந்தைகள் நடக்க ஆரம்பித்தவுடன் அவற்றை மிகுந்த கவனத்துடன் பார்க்க வேண்டும். ஏனெனில், அந்தக் குழந்தைகள் நடை பயின்ற ஆர்வத்ததில் எல்லா இடங்களுக்கும் சென்று பார்க்கவும், திடீரென கண்போன போக்கில் ஓடவும் செய்யும். இந்த சமயத்தில்தான் நிறைய விபத்துகளும் நிகழும். இது பல நேரங்களில் உயிரிழப்பு வரை செல்லக்கூடும். ஒரு நொடியில் அனைத்துமே தலைகீழாகிவிடும். அப்படியொரு பரிதாப சம்பவம்தான் சென்னையில் நடந்துள்ளது.

மூன்று குழந்தைகள்
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் காசிமணி. சொந்தமாக செய்து வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது குடும்பத்தினருக்கு சென்னையை அடுத்த ஆவடியில் குடிபெயர்ந்தார். இவர் கடந்த ஆறு மாதங்களாக ஆவடி அருகே உள்ள பட்டாபிராமில் தங்கி அங்கிருக்கும் செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு தனுஸ்ரீ, சுபஸ்ரீ, யுவா என 3 குழந்தைகள் உள்ளனர். இதில் கடைசி குழந்தையான யுவாவுக்கு ஒன்றரை வயது ஆகிறது.

உறவினருடன் கடைக்கு..
இந்நிலையில், காசிமணியின் உறவினரான செல்வம் என்பவர் இன்று குழந்தை யுவாவை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள மளிகைக் கடைக்கு சென்றிருக்கிறார். அப்போது குழந்தையை கீழே இறக்கிவிட்டு மளிகைப் பொருட்களை செல்வம் வாங்கிக் கொண்டிருந்தார். இதில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை யுவா, சாலையில் நாய் ஒன்று செல்வதை பார்த்து ஆர்வமிகுதியில் அதை நோக்கி ஓடியுள்ளது.

பரிதாபம்
இந்நிலையில், குழந்தை சாலையை கடக்கும் போது அங்கு வேகமாக வந்த அரசுப் பேருந்து, குழந்தை மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த குழந்தை யுவா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. இந்த விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து டிரைவர் இளங்கோவை கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீஸார் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
பட்டாபிராமில் புதுப்பெண் சந்தியா.. கல்யாணமான ஒரே மாதத்தில் கணவன் வீட்டிற்கு போன போது இப்படியா ஆகணும் -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications