Oneindia Exclusive: தமிழகம் என பட்ஜெட்டில் சொல்றதா முக்கியம்? பலன் கிடைப்பதை மட்டும் பாருங்க - வானதி
சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகம், தமிழ்நாடு என சொல்லாமல் விட்டதில் என்ன அரசியல் இருக்க போகிறது என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது நாட்டின் முழுமைக்குமான பட்ஜெட் என்கிற போது ஒவ்வொரு மாநிலத்தின் பெயர்களை தனித்தனியே சொல்ல வேண்டிய அவசியமும் இல்லையே என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் தமிழகம், தமிழ்நாடு என்ற பெயர் கூட வரவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து வானதி சீனிவாசனிடம் ஒன் இந்தியா சார்பில் கேள்வி பதில்களாக கேட்டிருந்தோம். அவரிடம் நாம் வைத்த கேள்விகளும் பதில்களும் இதோ!
கேள்வி: பட்ஜெட்டில் தமிழகம், தமிழ்நாடு குறித்து எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை, குறைந்தபட்சம் திருக்குறளோ புறநானூறோ கூட இல்லையே இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: இந்த பட்ஜெட்டானது நாட்டின் முழுமைக்குமான பட்ஜெட். இது மாநிலங்களுக்காக தனித்தனியாக எடுக்க வேண்டும் என்றில்லை. குறிப்பாக முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு ரூ 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அதிகமாக பயனாளிகள் இருப்பது தமிழகத்தில்தான்!
எல்லா திட்டங்களிலும் தமிழகம் பலன் பெறுகிறது என்ற போது தமிழகத்தின் பெயரை குறிப்பிடவில்லை என்பதில் என்ன அரசியல் இருக்கிறது. இது ஒட்டுமொத்த மக்களுக்கான பட்ஜெட்தான். எந்தெந்த துறைகள் தமிழகத்தில் சிறப்பாக இருக்க போகிறதோ அந்தந்த துறைகளில் நம் தமிழகம் அதிக பலனை எடுக்கும்.
குறிப்பாக சிறுகுறு தொழில் நிறுவனங்கள் எனும் போது அதிக பலனை தமிழகம்தான் பெற போகிறது. உள்கட்டமைப்பு வசதிகளும் அதி வேகமாக முன்னேறிய நகரங்களும் தமிழகத்தில்தான் இருக்கின்றன. நமது மாநிலம்தான் தொழில் சார்ந்த மாநிலம் என்பதால் நமக்குத்தான் அதிக பலன்கள் கிடைக்கும்.
கேள்வி: பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்: நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லை. நான்தான் ஏற்கெனவே சொன்னது போல் ஒவ்வொரு மாநிலத்திற்கென தனித்தனியாக அறிவிப்பு தேவையில்லை. ஏற்கெனவே தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமரின் வீடு கட்டும் திட்டம்! இதில் பலன் எடுத்துக் கொள்ள போவது நாமாகத்தான் இருப்போம்.
கேள்வி: உங்களுடைய சொந்த தொகுதியான கோவை, தொழிற்சாலைகள் நிறைந்த இடம், அங்கு கூட எந்த திட்டமும் இல்லையே?
பதில்: ஏற்கெனவே தமிழகத்தில் குறிப்பாக கோவையில் மோட்டார் தொழில், கிரைண்டர் தொழில் சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சகம் (MSME) மூலம் நிறைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. மிகவும் முக்கியமான திட்டம் என்றால் ராணுவ தளவாட காரிடர். ராணுவ பொருட்களை உற்பத்தி செய்யும் மையமாக கோவை மாறியுள்ளது. இவையில்லாமல் விமானம், ரயில், சாலை உள்ளிட்ட இணைப்புகளுக்காக நிறைய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு கோவை மாவட்டத்திற்கு மட்டும் ரூ 1500 கோடி கடனுதவி கொடுத்திருக்கிறது மத்திய அரசு.
கேள்வி: தமிழகத்திற்கென வெள்ள நிவாரண நிதியோ பேரிடர் நிதியோ ஒதுக்கவில்லையே
பதில்: வெள்ள நிவாரண நிதியை பட்ஜெட்டிற்கு ஒதுக்க மாட்டார்கள். குறிப்பாக நகர்ப்புறத்தில் செய்ய போகும் வளர்ச்சித் திட்டங்களுடன் சேர்த்துதான் பேரிடர் நிதி என ஒதுக்குவார்கள். நிவாரணத்திற்கென ஒரு சில விதி முறைகள் இருக்கின்றன. அப்படித்தான் பேரிடர் நிதியை மற்ற திட்டங்களுடன் சேர்த்து பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெள்ள நிவாரணத்திற்கென தமிழகத்தில் ஒரு கமிட்டி இருக்கிறது. அந்த நடைமுறைகள் எல்லாம் தனியே நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கேள்வி: ஆந்திராவுக்கும் பீகாருக்கும் அள்ளி அள்ளி திட்டங்களை அறிவிக்க காரணமே ஆட்சி கவிழக் கூடாது என்பதற்காகவா?
பதில்: ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அவர்களின் தேவைக்கேற்ப கொடுப்பதுதான் நிதி. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநிலங்கள் எல்லாம் தங்களுக்கு இதெல்லாம் தேவை என்பது குறித்தும் அதற்கான அடிப்படை காரணங்கள் குறித்தும் மத்திய அரசிடம் பேசியிருப்பார்கள். அதை வைத்துதான் குறிப்பிட்ட மாநிலத்திற்கு நிறைய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications