பராசக்தி படத்திற்கு ஒரு நீதி? ஜனநாயகன் படத்திற்கு ஒரு நீதியா? பொங்கிய தவெக.. திமுகவினர் பதிலடி
சென்னை: பராசக்தி படத்திற்கு ஒரு நீதி? ஜனநாயகன் படத்திற்கு ஒரு நீதியா? இதுதான் உங்கள் சமத்துவ சமூக நீதியா? என்று தவெக நிர்வாகி ரமேஷ் மற்றும் லயோலா மணி ஆகியோர் கேள்வி எழுப்பினார்கள். அவர்களுக்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழக ஊடக மற்றும் செய்தித் தொடர்பு அணி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் என்பவர் வெளியிட்ட பதிவில், "பராசக்தி படத்திற்கு ஒரு நீதி? ஜனநாயகன் படத்திற்கு ஒரு நீதியா? இதுதான் உங்கள் சமத்துவ சமூக நீதியா?

'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கைக்குழு (CBFC) சான்றிதழ் வழங்காமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதைக் கண்டிக்கிறேன்.இதற்குப் பெயர்தான் ஒன்றிய, மாநில அரசுகளின் மறைமுகக் கூட்டணி.
ஒரு படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து, கடந்த மாதமே முறைப்படி சமர்ப்பித்த பின்னரும் இன்றளவும் தணிக்கைச் சான்றிதழ் தரவில்லை. இதுதான் உங்கள் ஜனநாயகமா?
திரைத்துறை என்பது வெறும் பொழுதுபோக்குக் களம் மட்டுமல்ல, அது சாமானிய மக்களின் வலிகளையும் உரக்கச் சொல்லும் ஒரு சக்திவாய்ந்த ஊடகம். ஒரு படைப்பாளி தனது கருத்தைச் சுதந்திரமாகச் சொல்லும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.
அரசியல் கருத்து முரண்பாடுகள் இருப்பின் அதை மக்கள் மன்றத்தில் முடிவுக்கு விட வேண்டுமே தவிர, அதிகாரத்தைக் கொண்டு ஒரு படைப்பை முடக்குவது ஜனநாயகப் படுகொலையாகும்.
ஒரு திரைப்படம் உருவாவதற்குப் பின்னால் தயாரிப்பாளர், இயக்குனர் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பும், கோடிக்கணக்கான முதலீடும் உள்ளது. அனைத்து வேலைகளையும் சட்டப்படி நிறைவு செய்தும் சென்சார் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பது பலநூறு குடும்பங்களின் உழைப்பை நசுக்குவதற்குச் சமம்.
தமிழகத்தில் ஆளுங்கட்சி ஆதரவுப் படங்களுக்கு எளிதாகச் சான்றிதழ் கிடைத்துவிடுகிறது. ஆனால், 'ஜனநாயகன்' போன்ற படங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. எதற்கு இந்த அரசியல் ஓரவஞ்சனை? தணிக்கைக்குழு எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் உடனடியாகச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கூறியிருந்தார். இதனை டேக் செய்து
தவெக நிர்வாகி லயோலா மணி வெளியிட்ட பதிவில், " ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கைக்குழு (CBFC) சான்றிதழ் வழங்காமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதைக் கண்டிக்கிறேன்.இதற்குப் பெயர்தான் ஒன்றிய, மாநில அரசுகளின் மறைமுகக் கூட்டணி.
ஒரு படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து, கடந்த மாதமே முறைப்படி சமர்ப்பித்த பின்னரும் இன்றளவும் தணிக்கைச் சான்றிதழ் தரவில்லை. இதுதான் உங்கள் ஜனநாயகமா?" என்று கேட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த தவெக நிர்வாகி, இதற்கு டெல்லி அரசிடம் தான் போய் கேட்க வேண்டும் என்று எம்டன் மகன் நடித்த வலுவேலுக்கு சொல்வது போல் கிண்டல் செய்து பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications