ஒரு மாஸ்க் ரூ.6.45க்கு கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் இலவசமாக கொடுக்கிறோம் - ஆர்.பி உதயகுமார்
தமிழகத்தில் ரேசன் கடைகளில் இலவசமாக கொடுக்கப்பட உள்ள மாஸ்க் ஒன்று ரூ. 6.45க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் இலவச மாஸ்க் வழங்கப்பட உள்ளது. இந்த மாஸ்க்குகள் எத்தனை ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது எத்தனை கோடி மாஸ்க்குகள் விநியோகம் செய்யப்பட உள்ளன என்று கூறியுள்ளார் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார். இலவசமாக வழங்கப்பட உள்ள மாஸ்க் ஒன்று ரூ.6.45க்கு கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கின்றனர். சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் மாநிலம் முழுவதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது..

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதற்கான திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார். ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நபர் ஒருவருக்கு 2 மாஸ்க் வீதம் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர். பி. உதயகுமார்,ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட உள்ள மாஸ்க் ரூ. 6.45க்கு கொள்முதல் செய்யப்படுவதாக கூறினார்.
ஒரு நபருக்கு இரண்டு மாஸ்க் வீதம் 4.44 கோடி மாஸ்க்குகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்த அமைச்சர் உதயகுமார், தமிழ்நாட்டில் 69.09 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.30 கோடியில் இலவச மாஸ்க் வழங்கப்பட இருக்கிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications