தமிழகத்தில் போலீசார் செயல்படாமல் இருக்க முதல்வரே காரணம்.. ஓய்வு பெற்ற காவல் அதிகாரி குற்றச்சாட்டு
சென்னை: தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு தொடர்பாக மிகப் பெரிய விவாதமே நடந்து வருகிறது. ஆளும் தரப்பு சட்ட ஒழுங்கு சீராகவே இருப்பதாகச் சொல்லும் நிலையில், எதிர்க்கட்சி தரப்பு தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தொடர்ந்து கூறி வருகிறது. இது தொடர்பாக நமது ஒன் இந்தியா சார்பில் நடந்த விவாதத்தில் சில பரபர கருத்துகள் முன்வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மோசமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. அதேநேரம் சட்ட ஒழுங்கு சீராகவே இருப்பதாக ஆளும் தரப்பு சொல்லி வருகிறது.

கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் பள்ளியில் ஆசிரியை கொல்லப்பட்டுள்ளார், வழக்கறிஞர் மீது நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் நடந்துள்ளது, வாக்கிங் சென்ற பெண் மீது பாலியல் அத்துமீறல், சிறுமி கூட்டுப் பலாத்காரம் எனப் பல குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன. இதற்கிடையே இது தொடர்பாக நமது ஒன் இந்தியா சார்பில் நடந்த விவாதத்தில் பல்வேறு தரப்பினரும் பல கருத்துகளை முன்வைத்தனர்.
போலீசார் மொத்தமாகச் சீர்குலைந்துவிட்டதாக அதிமுக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இது தொடர்பாக அதிமுகவின் அதிவீரராம பாண்டியன் கூறுகையில், "நாம் என்ன செய்தாலும் இந்த அரசால் எதுவும் செய்ய முடியாது என்ற மனநிலை மக்களிடம் குற்றவாளிகளிடம் வந்துவிட்டது. சட்ட ஒழுங்கு அந்தளவுக்கு மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது" என்றார்.
அதற்கு பதிலளிட்ட திமுக சரவணன், "ஒட்டுமொத்த காவல் துறையையும் இவர்கள் அரசியலுக்காகப் பயன்படுத்துகிறார்கள். நேரம் பார்க்காமல் மக்களுக்காக பணியாற்றும் போலீசாரை கேவலப்படுத்துகிறார்கள். அரசியல் ரீதியாக இவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. இதனால் தங்கள் இருப்பை காட்டிக் கொள்ள இப்படிச் செய்கிறார்கள். தயவு செய்து தமிழ்நாடு போலீசாரை கேவலப்படுத்த வேண்டாம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துத் தெரிந்து கொண்டேன் என்றவர் தானே அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சட்ட ஒழுங்கு சீர்கெட்டதற்கான அடையாளம் அதுதான்" என்றார்.
மறுபுறம் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ரஜேந்திர ராஜா, "தமிழ்நாடு போலீசாரை யாராலும் குறை சொல்ல முடியாது. குறை சொல்ல மனமும் வராது. ஆனால், போலீசார் இயங்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவெடுக்க வேண்டியவர் முதல்வர் ஸ்டாலின் தான். பள்ளிக்கூடத்தில் சென்று கொலை செய்யலாம் என்ற எண்ணம் எப்படி வரும். தலைவன் எப்படி இருக்கிறதோ..
மக்கள் அப்படி தான் இருப்பார்கள். முதல்வர் ஆய்வு செய்கிறார் எல்லாம் சரி.. ஆனால், முதல்வர் சொல்வதைக் கீழே உள்ள அதிகாரிகள் கேட்பதில்லை என்பதே எனது குற்றச்சாட்டு. அமைச்சர்களும் அதிகாரிகளும் அவர் சொல்வதைக் கேட்பதில்லை.. பல நிர்வாக குளறுபடிகள் உள்ளன. மாநிலத்தின் சட்ட ஒழுங்கு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியே அதிருப்தி தெரிவித்துள்ளார். அதிகாரிகளுடன் நேரடியாக முதல்வர் பேசி வேலை வாங்குவதில்லை" என்றார்.
இந்த விவாதத்தை முழுமையாக இந்த லிங்கில் பார்க்கலாம்.
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications