ஆன்லைன் ரம்மி விவகாரம்- ஆளுநர் ரவிக்கு சாம்பல் அனுப்பும் போராட்டம் நடத்திய மாஜி அமைச்சர்!
ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் ஆளுநர் ரவிக்கு எதிராக பெரியாரிஸ்டுகள் நூதனப் போராட்டம் நடத்தினர்.
சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சாம்பல் அனுப்பும் போராட்டத்தை முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று நடத்தினர்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஆன்லைன் சூத்தாட்டத்திற்கு தடை விதித்து சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த பல மாதங்களாக இந்த மசோதாவை கிடப்பில் போட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென இம்மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்தார்.

தமிழ்நாடு அரசு முதல் முறையாக மசோதாவை அனுப்பிய போது உரிய விளக்கம் கேட்டு அந்த மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். மீண்டும் விளக்கம் அளித்து மசோதா அனுப்பப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என 2-வது முறையாக திருப்பி அனுப்பிவிட்டுள்ளார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பெரும்பாலான அர்சியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்க்கட்சித் தலைவராகவே தம்மை கருதுகிறார். தற்போது கூட்டப்படும் சட்டசபை கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான தடையை அமல்படுத்தி ஆளுநருக்கு அனுப்பினால் சட்டப்பிரிவு 200வது பிரிவின் கீழ் அதற்கு அவர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று சென்னையில் ஆளுநர் ரவியைக் கண்டித்து நூதனப் போராட்டம் நடத்தினர். ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலை செய்து கொண்டோர் சாம்பலை ஆளுநர் ரவிக்கு அனுப்பி வைக்கும் நூதனப் போராட்டத்தை பெரியார் தி.க.வினர் நடத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications