அக்.1 முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி.. 6 மாதத்தில் மறுபரிசீலனை.. நிர்மலா அறிவிப்பு
சென்னை: ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28% வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. வரும் அக்டோபர் 1 முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் பல்வேறு சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டியில் தொடர்ந்து அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஜிஎஸ்டி வருவதற்கு முன்னர் 17 வரிகள் இருந்த நிலையில், ஜிஎஸ்டி இதையனைத்தையும் ஒருங்கிணைத்தது. இதனையடுத்து கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டது.

ஆனால் ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக மாநில அரசுகள் விமர்சித்தன. இதனையடுத்து இந்த இழப்புகளை ஈடு செய்ய 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
அப்படியாக வழங்கப்பட்டு வந்த தொகையும் உரிய காலத்தில் கிடைக்காததால் மாநில அரசுகள் மத்திய அரசை விமர்சித்து வந்தன. இந்நிலையில் இந்த இழப்பீட்டு தொகைக்கான கால அவகாசம் கடந்த வருடம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இந்த இழப்பீடு தொகை அதன்பின் நீட்டிக்கப்படவே இல்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. ஜிஎஸ்டி தொடர்பாக ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும். மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.
இதில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28% வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புக்கொண்டது. அதன் ஒரு பகுதியாக அதன்படி, மாணவர்கள் தங்கும் விடுதிகளில் கட்டணம் செலுத்தும் வாடகைக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஹாஸ்டலில் தங்குவார்கள் இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
உறுதி செய்யப்பட்டு உள்ளது: இந்த நிலையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் 51வது கூட்டம் ஆன்லைன் மூலம் நடந்தது. இதில் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28% வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. வரும் அக்டோபர் 1 முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி விதிப்பை நடைமுறைப்படுத்திய பிறகு 6 மாதங்களுக்கு கழித்து மீண்டும் இதனை மறுஆய்வு செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளதாக 51வது GST கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பல்வேறு மாநிலங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.
ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை சேர்ந்தவர் தான் நாட்டை விட்டே வெளியேற போவதாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு இருந்தார். பல்வேறு தரப்பினர் இந்த வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 6 மாதங்களுக்கு கழித்து மீண்டும் இதனை மறுஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக தற்போது நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
தடையா?: அதே சமயம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் வருவாய்த்துறை செயலாளர், சஞ்சய் மல்ஹோத்ரா பேசுகையில், "ஆன்லைன் கேம்பளிங் ஏற்கனவே ஜிஎஸ்டிக்கு உட்பட்டது, ஆனால் அது இன்னும் சட்டப்பூர்வமாக்கப்படவில்லை.. ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது என்பதால் ஆன்லைன் பந்தயம் & சூதாட்டம் சட்டவிரோதமானது இல்லை என்று கூற முடியாது. அது இப்போதும் சட்ட விரோதமானதுதான்.
ஆன்லைன் கேமிங்கிற்கு வரி விதிப்பதால் அதை தடை செய்த மாநிலங்களில் ஆன்லைன் கேம் சட்டப்பூர்வமாகிவிடும் என்று கூற முடியாது. எந்தெந்த மாநிலங்களில் தடை இருக்கிறதோ அந்தந்த மாநிலங்களில் தடை தொடரும், என்று அறிவித்துள்ளார் வருவாய்த்துறை செயலாளர், சஞ்சய் மல்ஹோத்ரா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications