Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் 600 பெரிய மரங்களை வெட்டுறோமா? இல்லவே இல்ல.. பதறி அடித்து விளக்கம் கொடுத்த தெற்கு ரயில்வே!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக 600 மரங்கள் வெட்டப்பட இருப்பதாக தகவல் வெளியாகி கண்டனங்கள் எழுந்த நிலையில், தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

சென்னை, எழும்பூா் ரயில் நிலையத்தை ரூ.734.91 கோடியில் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ரயில் நிலையத்தையொட்டியுள்ள கட்டடங்கள் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

 Only 182 trees to be cut for egmore railway station expansion : Southern railway explains

ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக மரங்கள் அகற்றப்படுவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பழமைவாய்ந்த மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்திற்காக அப்பகுதியில் வளர்க்கப்பட்டுள்ள ஏறக்குறைய 600 மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள மரங்கள் அனைத்தும் 50 முதல் 80 ஆண்டுகள் வயதுடையவை. பல மரங்கள் நூறு ஆண்டுகளை கடந்தவை.

பாதுகாக்கப்பட வேண்டிய மரங்களை வெட்டி வீழ்த்துவது எந்த வகையிலும் நியாயமல்ல. நவீனமயமாக்கம் என்ற பெயரில் விலைமதிப்பற்ற மரங்களை வெட்டி வீழ்த்துவதை ஏற்க முடியாது. எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திற்காக வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

வெட்டப்படும் மரங்களை ரயில்வே செலவில் அருகில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின் திடல்கள், பூங்காக்கள் ஆகியவற்றில் நட்டு பராமரிக்க வேண்டும். வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையை விட 10 மடங்கு மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக 182 மரங்கள் மட்டுமே வெட்டப்படுகின்றன என்றும், வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக ஒவ்வொரு மரத்திற்கும் 10 மரக்கன்றுகள் நடப்படும் எனும் தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே தரப்பில், வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஈடாக 10 மரக்கன்றுகள் நடப்படும். பாதிக்கப்படும் 318 மரங்களில் 103 மரங்கள் ரயில்வே வளாகத்தில் வேறு இடத்திற்கு இடம்மாற்றம் செய்யப்படும். 33 மரங்களின் கிளைகளை சீர்செய்து அதே இடத்தில் தக்கவைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+