தியேட்டர்கள், மால்களில் 50% பேர் மட்டும் அனுமதி.. தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள்.. முழு விவரம்!
சென்னை: கொரோனா பரவல் காரணமாக சினிமா தியேட்டர்கள், மால்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.
Recommended Video
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில், இந்தியாவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, சத்தீஸ்கர், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

அது போன்று தமிழகத்திலும் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நோய் தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலுமாக தடை விதிப்பதும் ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிப்பது அவசியமாகிறது.
ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறைகள் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள், பொதுமக்களின் உடல் வெப்பநிலை(தெர்மல் ஸ்கேனிங்) பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் (Sanitiser) உபயோகப்படுத்துவதையும் முகக் கவசம் அணிவதையும் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து அனுமதிக்க வேண்டும். முகக் கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்கக் கூடாது. ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்ப தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும். மேலும் நிலையான வழிகாட்டும் நடைமுறைகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நிலையான வழிகாட்டும் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து, பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
தற்போது கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நிலையான வழிகாட்டும் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி புதுவை, ஆந்திரா மற்றும் கர்நாடகா செல்லும் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டும் நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும் வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் இரவு 11 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். மேலும் உணவகங்களில் இரவு 11 மணி வரை பார்சல் சேவை அனுமதிக்கப்படும்.
கேளிக்கை விடுதிகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
பொழுதுப்ோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடுபம் இடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கள் உள்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும்.
நிலையான வழிகாட்டு நெறிமுறைப் பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டும் பங்கேற்கும் வண்ணம் சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் அனுமதிக்கப்படும்.
நிலையான வழிகாட்டு நெறிமுறைப் பின்பற்றி, திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும் இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ளலாம்.
விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதியின்றி விளையாட்டு போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படும்.
நீச்சல் குளங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
நிலையான வழிகாட்டு நெறிமுறைப் பின்பற்றி பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
31.8.2020 அன்று அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைப் பின்பற்றி அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும். இருப்பினும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.
நிலையான வழிகாட்டும் நடைமுறைகளை பின்பற்றி சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். இருப்பினும், படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும் சின்னத்திரை அல்லது திரைப்பட கலைஞர்கள், பணியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்வதை சின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்பு நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.
வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்ரு பயணிகள் மட்டும் பயணிக்க ஏற்கெனவே 1.7.2020 முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.
ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரு பயணிகள் மட்டும் பயணிக்க ஏற்கெனவே 1.7.2020 முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.
வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க இ பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications