நிலம் திறந்தவெளி, புதிய வீட்டுமனை பிரிவு.. மொத்த பேரின் கவனம் திருப்பிய பெயிரா.. அரசுக்கு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு அனுமதி பெறும் இனங்களில் திறந்தவெளி நிலம் சம்பந்தமாக விலக்களிக்க கோரி தமிழக அரசுக்கு பெயிரா வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், திறந்தவெளி நிலம் சம்பந்தமாக கால அவகாசத்தை சரியான முறையில் நிர்ணயித்து, அனைத்து தரப்புக்கும் சலுகை

வழங்கி புதிய வழிகாட்டு சுற்றறிக்கையை வெளியிட்டு உதவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Open Allocation Lands TN Government New Housing Division

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.. அந்த கடிதத்தில் உள்ளதாவது:

வீட்டுமனை பிரிவு

தமிழகத்தில் புதிய வீட்டுமனை பிரிவுகளை அமைப்பதற்கான திறந்தவெளி நிலம் (OPEN SPACE RECREATION) சம்பந்தமான, நகர் ஊரமைப்பு இயக்குனர் அவர்களின் வழிகாட்டு சுற்றறிக்கை எண் ROC NO.4367/2019/TCP2 தேதி: 14.08.2021 இல் ஒரு ஹெக்டேருக்குள் அமைக்கப்படும் வீட்டுமனை பிரிவுக்கான (OSR) திறந்தவெளி நிலத்திற்கு ஈடாக சாலைகள் நீங்கலாக விற்பனைக்குரிய நிலத்திற்கு, 10% சதவீதம் திறந்தவெளி நிலமாகவோ அல்லது அதற்குண்டான சந்தை மதிப்பில் 10% சதவீதம் கட்டணமாகவோ செலுத்தும் வகையில் வழிவகை செய்து தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், மீண்டும் அதே விண்ணப்பதாரர் அவர் பெயரில் உள்ள மேற்கண்ட வீட்டுமனை பிரிவிற்கு அருகிலுள்ள அல்லது பின்புறம் மேலும் ஒரு ஹெக்டேருக்குள் உள்ள மிகை நிலத்தில் மேற்கண்ட OSR பயனை அடையும் வகையில் கூடுதலாக வீட்டுமனை பிரிவை ஏற்படுத்த எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்கின்ற தெளிவுரை இதில் குறிப்பிடப்படவில்லை.

கால அவகாசம்

மேலும் இந்த விண்ணப்பதாரரின் மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட இரத்த சம்பந்தப்பட்டவர்கள் பெயரில் அருகில் உள்ள அல்லது பின்புறம் உள்ள நிலத்திற்கு மேற்கண்ட வகையில் (OSR) நிலம் சம்பந்தமான பலனை அடையும் வகையில் வீட்டுமனை பிரிவு அமைக்க கால அவகாசமும் இதில் குறிப்பிடப்படவில்லை.

மேலும் மேற்கண்ட வகையில் சாலைகள் மீது அமைந்துள்ள நிலங்களில் முதன் முதலில் அபிவிருத்தி செய்யப்படும் வீட்டுமனை பிரிவுகளுக்கு திறந்தவெளி நிலம் சம்பந்தமான பலனை அடைந்த பின், அந்த வீட்டுமனை பிரிவிற்கு பின்புறம் அமைந்துள்ள அல்லது சாலைகளில் மீது அருகில் அமைந்துள்ள வெவ்வேறு உரிமையாளர்களுக்கு சம்பந்தமான நிலங்களில், புதிய வீட்டுமனைகளை அமைக்கும் போது மேற்கண்ட வகையில் திறந்தவெளி நிலம் சம்பந்தமான பலனை அவர்களும் அடைய முடியவில்லை.

வீட்டுமனை அபிவிருத்தியாளர்கள்

ஆகவே, பெருமதிப்பிற்குரிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், மேற்கண்ட ஒரு ஹெக்டேருக்குள் புதிய வீட்டுமனை பிரிவினை அமைக்கும் இனங்களில் திறந்தவெளி நிலம் சம்பந்தமாக கட்டுனர்கள், வீட்டுமனை அபிவிருத்தியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை தாங்கள் கருத்தில் கொண்டு, மேற்கண்ட பிரச்சினைக்கு தகுந்த தீர்வு காண வேண்டும்.

அந்தவகையில், ஒரு ஹெக்டேருக்குள் மேற்கண்ட வகையில் அருகருகே அமைக்கும் புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனை பிரிவுகளுக்கு பின்புறம் அமைந்துள்ள நிலங்களில் அமைக்கப்படும் வீட்டுமனை பிரிவுகளுக்கும், ஒரே விண்ணப்பதாரர் பெயரில் விண்ணப்பிக்க நேரிடும் இனங்களில் திறந்தவெளி நிலம் சம்பந்தமான பலனை அடைவதற்கு இரண்டு ஆண்டு காலத்திற்குப் பிறகு விண்ணப்பிக்கலாம் என்கின்ற கால அவகாசத்தை வழங்க வேண்டும்.

திறந்தவெளி நிலம் சம்பந்தமான பலனை அடைவதற்கு கால அவகாசம்

அதே விண்ணப்பதாரர் தமது மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட இரத்த சம்பந்தப்பட்டவர்களின் பெயரில் விண்ணப்பிக்க நேரிடும் இனங்களில் ஓராண்டு காலத்திற்குப் பிறகு விண்ணப்பிக்கும் வகையிலும், ரத்த சம்பந்தம் இல்லாத வேறு நபர்கள் பெயரில் உள்ள நிலங்களுக்கு திறந்தவெளி நிலம் சம்பந்தமான பலனை அடைவதற்கு கால அவகாசம் ஏதும் நிர்ணயிக்காமல் உடனடியாக அனுமதி வழங்கும் வகையிலும், தாங்கள் திறந்தவெளி நிலம் சம்பந்தமாக கால அவகாசத்தை சரியான முறையில் நிர்ணயித்து, அனைத்து தரப்புக்கும் சலுகை வழங்கி புதிய வழிகாட்டு சுற்றறிக்கையை வெளியிட்டு உதவிட வேண்டும்" என்று கடிதம் எழுதியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+