'சீக்கிரம் வாங்க.. இறைவனை பிரார்த்திக்கிறேன்..' ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து ஈபிஎஸ் ட்வீட்
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாத்த
பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி, கிராமத்துக் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்துள்ளதால், அண்ணாத்த படத்தின் மீது மிகப் பெரிய அளவுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தீபாவளி தினத்தன்று வெளியாகும், அண்ணாத்த படத்தைப் பிரம்மாண்டமாகக் கொண்டாட அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். சில இடங்களில் படத்தின் படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அவை மிக வேகமாக விற்றுத் தீர்ந்து வருகிறது.

உடல்நிலை பாதிப்பு
இந்தச் சூழலில் ரஜினிகாந்த்திற்கு திடீரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாகக் கடந்த அக். 28ஆம் தேதி அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியிருந்தார். இருப்பினும், ரஜினிகாந்த்துக்கு இரவு முழுவதும் ஐ.சி.யு-இல் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.

காவிரி மருத்துவமனை
இதனிடையே ரஜினிகாந்த்தின் மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பைச் சீரமைக்க அவருக்கு மறுசுழற்சி சிகிச்சை அக். 29ஆம் தேதி வெற்றிகரமாகச் செய்யப்பட்டதாகக் காவிரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நேற்று கூறப்பட்டது. ரஜினிகாந்த் உடல்நிலை தேறி வருவதாகவும், அடுத்த சில நாட்களில் ரஜினிகாந்த் முழுமையான குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அதில் கூறப்பட்டிருந்தது.

ஈபிஎஸ் ட்வீட்
இந்நிலையில், ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications