சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு...எதிர்க்கட்சிகள் அமளி...கூச்சல், குழப்பத்தால் பரபரப்பான கலைவாணர் அரங்கம்

Google Oneindia Tamil News

சென்னை: துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவர் பட்ஜெட் உரையை வாசிக்கும் முன்பே தங்களுக்கு பேச அனுமதிக்க வேண்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திமுக உறுப்பினர்கள் பட்ஜெட் உரையை புக்கணித்தது அங்கு இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்

Opposition parties Opposition to the budget text at kalaivanar arangam

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்புகளை துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் வெளியிட்டு வருகிறார். அவர் பட்ஜெட் உரையை வாசிக்கும் முன்பே தங்களுக்கு பேச அனுமதிக்க வேண்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பட்ஜெட்டை படிக்க விடாமல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் முழக்கம் செய்தனர். ஒரு பக்கம் இந்த கூச்சல்களுக்கிடையே ஒ.பி.எஸ் தனது பட்ஜெட் உரையை வாசித்து கொண்டிருந்தார்.திமுகவின் துரைமுருகன் சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் மைக் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையிலும் அவர்கள் முழக்கம் எழுப்பினர் . சபாநாயகர் அவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனாலும் அவர்கள் அதை ஏற்க மறுத்து கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் பட்ஜெட் உரையை புக்கணித்தது அங்கு இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து ஒ.பி.எஸ் பட்ஜெட் உரையை வாசித்தார்.

English summary
Opposition parties have stated they will not run in the by-elections. Screaming, chaotic artistic arena
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X