லோக்சபா தேர்தல் வெற்றியே முக்கியம்.. பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல.. பரூப் அப்துல்லா!
தேர்தல் வெற்றிக்கு பின் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யலாம் என்று பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
சென்னை: 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். தேர்தலில் எப்படி வெற்றிபெறுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தாள் விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதேபோல் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் கலந்துகொண்டனர். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதால், தேசிய அளவிலான தலைவர்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் அனைத்து தரப்பினராலும் கூர்ந்து நோக்கப்பட்டது.

பரூக் அப்துல்லா பேச்சு
இந்தப் பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா பேசுகையில், மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்காகவும் பணியாற்ற வேண்டும். முதல்வர் ஸ்டாலின் குறித்த குறும்படம் இங்கு காட்டப்பட்டது. அதில் பல்வேறு பணிகளை செய்துள்ளார். இன்னும் பல பணிகளை அவர் செய்ய இருக்கிறார். இந்தியா ஒரு கடினமான சூழலில் இருந்து வருகிறது. இதை யாரும் மறக்கவில்லை.

காஷ்மீர் - தமிழ்நாட்டிற்கு பொதுவானது என்ன?
ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிற்கும் காஷ்மீருக்கும் எது பொதுவானது? ஸ்ரீநகரின் வெப்பமும், தமிழ்நாட்டின் வெப்பமும் வெவ்வேறானவை. இரு மாநிலங்களிலும் மக்களால் சாப்பிடப்படும் உணவில் அதிக வேறுபாடுகள் உள்ளன. தமிழ் மொழியை என்னால் புரிந்துகொள்ள முடியாது. நான் பேசும் மொழியை உங்களால் புரிந்துகொள்ள முடியாது.

மு.க.ஸ்டாலின்
அப்படியிருக்கும்போது எது நமக்கு பொதுவானதாக இருக்கிறது? நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் நமக்குள் பொதுவானதாக உள்ளது. மு.க.ஸ்டாலின் அவரது தந்தையைப் போலவே எல்லாத் தளங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருடைய தந்தையை நானும் எனது தந்தையும் நன்கு அறிவோம். ஆனால், இன்னும் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்த நாட்டிலும்தான்.

அனைவரும் இந்தியர்கள்
நான் அவரிடம் கேட்டுக்கொள்வதெல்லாம், இங்கிருந்து கொண்டே இந்தியா குறித்து சிந்திக்க வேண்டும் என்பதுதான். அனைத்து மாநிலங்களும் எப்படி ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களும், நாட்டின் ஒருபகுதி என்பதை உணரவேண்டும். இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர் என யாராக இருந்தாலும் நாம் அனைவரும் இந்த தேசத்தைச் சேர்ந்த இந்தியர்கள். நாம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதைத்தான், நான் அவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

ஒன்றிணைய வேண்டும்
இதனை கோரிக்கையாக சொல்லவில்லை, வலியுறுத்திகிறேன். இந்த மேடையில் இல்லாத தலைவர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது, விழித்துக் கொள்ளுங்கள் என்பது மட்டும்தான். அனைத்து மக்களும் மரியாதை, மாண்பு, அமைதியுடன் வாழும் நாட்டை கட்டமைக்க நாம் ஒன்றிணைய வேண்டும். நாட்டில் மக்கள் பசியுடனும், வேலையில்லாமலும், விலைவாசி உயர்வாலும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த நாட்டை வலிமைபெறச் செய்ய முடியாது.

பிரதமர் வேட்பாளர் முக்கியமில்லை
ராணுவம், கப்பல் படை, விமானப் படையால் ஆனாது அல்ல இந்தியா. அது மக்களால் ஆனது. இந்தியாவில் வாழும் இந்திய மக்களால்தான் நாட்டை வலிமைப்படுத்த முடியும். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து மாற்றுக்கருத்து இருந்தாலும், அதனை ஒதுக்கிவிட்டு நல்லிணக்கத்துடன் செயல்படவேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது முக்கியமில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு வெற்றிதான் முக்கியம். பிரதமர் யார் என்பதை தேர்தல் வெற்றிக்கு பின் முடிவு செய்யலாம் என்று தெரிவித்தார்.

மல்லிகார்ஜுன கார்கே பதில்
இதனைத் தொடர்ந்து இந்தப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு யார் தலைமை என்பது முக்கியமல்ல, பாஜகவை அனைவரும் இணைந்து வீழ்த்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் போராட்டத்துக்கும் ஸ்டாலின் தலைமை தாங்குவார் என்றும், அனைத்து சக்திகளையும் மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைப்பார் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications