குஜராத்தில் நோ, தமிழ்நாட்டில் ஓகே! அணு உலை திட்டத்தில் பாஜக டபுள் ஆக்ட்! பூவுலகின் நண்பர்கள் அட்டாக்
சென்னை: குஜராத்தில் அணு உலை திட்டத்தை எதிர்க்கும் பாஜக, தமிழ்நாட்டில் மட்டும் ஈனுலைத் திட்டத்தைச் செயல்படுத்துவது ஏன் என்று சுற்றுச்சூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை அருகே உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள அதிவேக ஈனுலையின் எரிபொருள் நிரப்பப்படுவதைப் பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாட்டைக் கண்டறிந்து சென்றுள்ளார்.

இந்த ஈனுலை மிகமிக ஆபத்தானது என்று பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. முதலில் இந்த ஈனுலை என்றால் என்ன? அதனால் என்ன ஆபத்து? ஈனுலை என்பது மின்சாரம் தயாரிப்பதற்காக மட்டும்தானா?
இப்படி பல்வேறு சந்தேகங்களுக்குப் பதில் அறியச் சுற்றுச்சூழல் ஆர்வலர் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கோ.சுந்தர்ராஜனிடம் பேசினோம். அவர் இந்தத் திட்டத்திற்குப் பின்னால் உள்ள ஆபத்தை உடைத்துப் பல உண்மைகளை முன்வைத்தார்.

"உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகள் முயற்சி செய்து கடைசியில் கைவிட்ட திட்டம்தான் இந்த ஈனுலை திட்டம். அணு உலைகளே ஆபத்தானவை. அதில் ஈனுலை என்பது மிகவும் ஆபத்தானவை.

இதில் அதிகமாக ப்ளூடோனியம் பயன்படுத்தப்படும். அடுத்து இதன் திரவ சோடியத்தின் தன்மை என்னவென்றால், காற்றில் உள்ள ஈரப்பதம் அதன் மீது பட்டாலே அது தீப்பிடித்துவிடும்.
அதற்கு ஜப்பானில் நடந்த சம்பவம் தான் சரியான உதாரணம். ஜப்பானில் மாஞ்சூ ஈனுலையில் தீ விபத்து ஏற்பட்ட பிறகு அது நிரந்தரமாக மூடப்பட்டது. அது குறித்து இணையத்தில் நீங்கள் தேடிப் பார்த்தாலே எக்கச்சக்கமான தகவல் கிடைக்கும். உலக நாடுகளை அச்சுறுத்திய ஆபத்தான சம்பவம் அது.

அப்படி ஒரு ஆபத்தான திட்டத்தைத்தான் தமிழ்நாட்டில் செயல்படுத்தியுள்ளார்கள். சென்னையைச் சுற்றி ஒன்றரை கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவ்வளவு மக்கள் தொகை உள்ள ஒரு பகுதியில் இந்த ஈனுலையை திறந்துள்ளார் மோடி.
ஒரு சின்ன விபத்து நிகழ்ந்தால் கூட, அது இவ்வளவு மக்களைப் பாதிக்கக் கூடியதாக இருக்கும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆகவேதான் நாங்கள் அச்சப்படுகிறோம்.
இந்த மாதிரியான ஈனுலைகள் இயக்கப்பட்டாலே அதன் அருகில் உள்ள பகுதிகளில் அதிகப்படியான கதிர்வீச்சு கட்டாயம் இருக்கும். இந்தக் கதிர்வீச்சு புற்றுநோய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளை உண்டாக்கும்.

அதேபோல எலும்பு மஜ்ஜை (Multiple myeloma) புற்று நோய்கூட வர வாய்ப்புகள் அதிகம். இந்தப் பிரச்சினை ஏற்கெனவே கல்பாக்கம் சுற்றி உள்ள பகுதிகளில் அதிகம் உள்ளதாக ஏற்கெனவே எடுக்கப்பட்ட அறிக்கைகளில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன.
இந்த Multiple myeloma அறிகுறிகள் கல்பாக்கம் பகுதிகளில் ஏற்கெனவே அதிகமாக உள்ளதாக மஞ்சுநாத் அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. அதாவது தேசிய அளவை விட 7 மடங்கு அதிகமாக கல்பாக்கம் பகுதிகளில் தென்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

ஆகவேதான் பிற்காலத்தில் நடக்க உள்ள ஆபத்தை நாங்கள் முன்கூட்டியே கணித்து எச்சரித்து வருகிறோம். அணு உலை விபத்து என்பது ஏதோ கார் விபத்து, பேருந்து விபத்து போல எளிமையானது அல்ல. அது மிகமிக ஆபத்தானது.
ஒரு வாகன விபத்து நடந்தால், அந்தப் பகுதியில் குறைந்தளவுக்கான பாதிப்புகள் இருக்கும். அடுத்த அரை மணிநேரத்தில் அந்தப் பகுதி இயல்புநிலைக்குத் திரும்பிவிடும்.
ஆனால், அணு உலை விபத்து என்பது ஏற்பட்டால், அந்தப் பகுதிக்குள் 50 ஆண்டுகளுக்கு மக்கள் உள்ளேயே செல்ல முடியாது. அப்படிப் பார்த்தால் வருங்காலத்தில் வாழ்வதற்கான தகுதியற்ற நகரமாகச் சென்னை மாறலாம்.
குஜராத் மாநிலத்தில் இதேபோல் ஒரு திட்டம் கொண்டுவர உள்ளது என்பதை அறிந்து அன்றைய முதலமைச்சர் விஜய் ரூபானி எதிர்த்தார். அவர் பாஜகவைச் சேர்ந்தவர். அவரது எதிர்ப்பால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டை அணுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மாற்றி வருகிறார்கள்.

குஜராத்தில் அணு உலை திட்டம் கொண்டுவர முயன்றபோது அதற்குக் கடுமையான எதிர்ப்பு வந்ததும் அதை உடனே கைவிட்டார்கள். ஆனால், அதைவிடப் பல மடங்கு ஆபத்தான ஈனுலை திட்டத்தைத் தமிழ்நாட்டிற்குள் கொண்டுவந்து வைக்கிறார் மோடி. இது என்ன நியாயம்?
இந்தியாவில் அணு சக்தி என்பது தேவை என்று மத்திய அரசு ஒரு கொள்கை முடிவை எடுத்தால், அதை அனைத்து மாநிலங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். குஜராத்தில் எதிர்ப்பு வந்தால், அங்கே வைக்கமாட்டோம். தமிழ்நாட்டில் கொண்டு வந்து வைப்போம் என்று ஒருதலை பட்சமாக நடந்து கொண்டால், அது என்ன நியாயம்?
இந்த அணு உலை மூலம் ப்ளூட்டோனியம் அணுக் குண்டுகளைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. அந்தக் குண்டுகள் மிகமிக ஆபத்தானவை. கொடியவை. அதைத்தான் தமிழ்நாட்டில் உள்ள ஈனுலையில் தயாரிக்கப் போகிறார்கள்.
அப்படி ப்ளூடோனியம் குண்டுகள் தயாரிக்கும் போது கூடவே கொஞ்சம் மின்சாரம் கிடைக்கும். அதுதான் உண்மை. இதை மறைத்து மக்களை நம்ப வைக்கிறார்கள்" என்கிறார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications