விடுவதாய் இல்லை போல..அதிமுக ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிராக ஓபிஎஸ் கோஷ்டி மேலும் 2 வழக்கு!

அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிராக மேலும் 2 வழக்குகளை தாக்கல் செய்தது ஓபிஎஸ் கோஷ்டி.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஜேசிடி பிரபாகர் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுக்களுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டியது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்; மேலும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

 OPS Faction files 2 more pleas against AIADMK General Council Resolutions

இது தொடர்பாக வழக்கு முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கினார். இதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் பெஞ்ச், இபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து இவ்வழக்கு உச்சநீதிமன்றத்துக்குப் போனது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அண்மையில் அதிரடி தீர்ப்பை வழங்கியது. அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது சட்டப்படி செல்லுபடியாகும் என தீர்ப்பு அளித்தது. அதேநேரத்தில் ஜூலை 11 பொதுக்குழுவின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குரித்து சிவில் நீதிமன்றம் முடிவு செய்யும் எனவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பின் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. வழக்கு தொடர்ந்தார். ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என மனோஜ் பாண்டியன் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமி தரப்பின் பதில் மனு மீது மனோஜ் பாண்டியன் விளக்கம் தர உத்தரவிடப்பட்டது.

இதனிடையே அதிமுக ஓபிஎஸ் அணியின் ஜேசிடி பிரபாகர், வைத்திலிங்கம் ஆகியோரும் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். ஜேசிடி பிரபாகர், வைத்திலிங்கம் மனுக்களுக்கு உரிய பதில் தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+