100 நாள் வேலை திட்டம்.. மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த ஓபிஎஸ்.. அப்போ கூட்டணி விஜய் பக்கம்தானா
சென்னை: 100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றான விக்ஷித் பாரத் சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நிதிப் பகிர்வின் மூலமாக குறைந்த நிதி ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு, இந்த சட்ட முன்வடிவு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மத்திய அரசுக்கு எதிரான ஓபிஎஸ்ஸின் அறிக்கை பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு 2005ஆம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ் 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அவர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 14.35 கோடி பேர் செயலில் உள்ள தொழிலாளர்களாக உள்ளனர். இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 90 சதவிகித நிதியை மத்திய அரசு வழங்கி வரும் நிலையில், அதனை 60 சதவிகிதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் நிதி பங்களிப்பு 10 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக உயர்வதால், மாநில அரசுகளுக்கு கூடுதல் சுமை ஏற்படும். அதேபோல் மகாத்மாக் காந்தியின் பெயரையும் நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆனால் அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அமைதி காத்து வருகின்றன. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஓபிஎஸ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக, விக்சித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தற்போது தாக்கல் செய்துள்ளது.
இந்தச் சட்டமுன்வடிவில் ஒவ்வொரு நிதியாண்டிலும் மாநிலங்களுக்கான ஒதுக்கீடு என்பது மத்திய அரசு வகுக்கும் வரம்புகளுக்கு உட்பட்டு மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மக்கள் தொகை, வறுமை ஆகியவற்றின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக குறைவதோடு, வேலை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறையக்கூடும்.
இந்த திட்டத்திற்கான மத்திய நிதி உதவி என்பது 60 விழுக்காடாகவும், மாநில நிதி உதவி என்பது 40 விழுக்காடாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய அரசின் நிதி உதவி என்பது 100 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக குறைக்கப்பட்டு இருக்கிறது. மாநிலங்களின் மீது 40 விழுக்காடு கூடுதல் நிதி திணிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு நிதியாண்டிலும் விதைப்பு மற்றும் அறுவடை உள்ளிட்ட வேளாண் பருவம் குறித்த 60 நாட்களை மாநில அரசு அறிவிக்க வேண்டுமென்றும், அந்த நாட்களில் இந்தச் சட்டத்தின்கீழ் எந்தப் பணியும் மேற்கொள்ளக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வேளாண் பருவத்தில் குறைந்த ஊதியத்தில் விவசாயத் தொழிலாளர்கள் விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்படும் நிலை ஏற்படும்.
தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமுன்வடிவு வேலை பெறுவோரின் எண்ணிக்கையை குறைக்கவும், வேளாண் பருவக் காலத்தில் விவசாயத் தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்கவும் வழிவகை செய்வதோடு, மாநில அரசுகளின் மீது கூடுதல் நிதிச் சுமையையும் ஏற்படுத்தும். ஏற்கெனவே, நிதிப் பகிர்வின் மூலம் குறைந்த ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு இந்தச் சட்டமுன்வடிவு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
எனவே மாநிலங்களின் நலன்களையும், விவசாயப் பெருங்குடி மக்கள் உள்ளிட்ட ஏழையெளிய கிராமப்புற மக்களின் நலன்களையும் பாதிக்கும் விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு உறுதிச் சட்டமுன்வடிவினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளவர், நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசுக்கு எதிரான ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிடுப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications