பாஜக கையிலுள்ள துருப்பு சீட்டு.. எடப்பாடி இதை எப்படி மறந்தார்.. ஏக குஷியில் ஓபிஎஸ் டிடிவி தரப்பு?
இந்நிலையில் பாஜக கூட்டணியை விட்டு விலகுவதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது ஓபிஎஸ் தரப்பை குஷியடைய வைத்துள்ளதாம். இந்நிலையில் தினகரன், சசிகலா, ஓபிஎஸ் தலைமையிலான அணி பாஜகவிற்கு ஆதரவு அளித்தால் எடப்பாடி தலைமையிலான அதிமுகவிற்கு சிக்கல் வரக்கூடும் என்கிறாரகள் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர். பாஜக கையிலுள்ள துருப்பு சீட்டு என்றும் இதை எப்படி எடப்பாடி பழனிசாமி மறந்தார் என்றும் பாஜக ஆதரவு அரசியல் நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அதிமுக சார்ப்பில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் " தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள, பாஜகவின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு அதிமுக மீதும், எங்களுடைய கட்சியின் தெய்வங்களான பேரறிஞர் அண்ணா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியும், எங்கள் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.
மேலும், பாஜகவின் மாநிலத் தலைமை கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தும் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழகத்தின் எம்ஜிஆர் மாளிகையில் இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல் பாஜகவின் கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்ற ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
வருகின்ற 2024-ல், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மற்ற கட்சிகளின் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அதிமுக பாஜக கூட்டணி முடிவுக்கு வந்துள்ளதை எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி இப்படி அறிவிக்க காரணம், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இல்லாமல் சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறாராம். 2021 சட்டமன்ற தேர்தலில் தோற்க பாஜகதான் காரணம் என அதிமுக தலைவர்கள் பலரும் கருதுகிறார்கள். இந்த கருத்தை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாஜக இல்லாமல் சந்தித்தால், முஸ்லிம்கள், தலித்துக்கள், கிறிஸ்தவர்கள் வாக்குகளை மீண்டும் பெரிய அளவில் பெற முடியும்என்று அதிமுக தலைமை நினைக்கிறதாம். அதற்காகவே கூட்டணியில் இருந்த விலகி உள்ளதாம்.2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி வைக்ககூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம். வலிமையான தலைவராக உருவெடுக்க விரும்பும் எடப்பாடி பழனிசாமி, அதற்காக தேர்தலாக 2024 தேர்தலை பயன்படுத்த விரும்புகிறாராம்.
இந்நிலையில் பாஜக கூட்டணியை விட்டு விலகுவதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது ஓபிஎஸ்தரப்பை குஷியடைய வைத்துள்ளதாம். இந்நிலையில் தினகரன், சசிகலா, ஓபிஎஸ் தலைமையிலான அணி பாஜகவிற்கு ஆதரவு அளித்தால் எடப்பாடி தலைமையிலான அதிமுகவிற்கு சிக்கல் வரக்கூடும் என்கிறாரகள் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள்.
டிடிவி தினகரனை கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் சேர்க்க பாஜக தேசிய தலைமை வலியுறுத்திய போதும், எடப்பாடி பிடிவாதமாக மறுத்துவிட்டார் என்றும் , அப்படி கூட்டணி வைத்திருந்தால் அதிமுக கூடுதலா 20 முதல் 30 இடங்களில் வென்று இருக்கும் என்றும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
இப்போது சசிகலா, ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் இணைந்து செயல்படும் நிலையில், எடப்பாடிக்கு எதிராக பாஜக செயல்பட அவர்களை துருப்பு சீட்டாக பயன்படுத்தலாம் எனறும் இதை எப்படி எடப்பாடி மறந்தார் என்றும் சில அரசியல் நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதனிடையே பாஜக ஆதரவாளர்கள் சிலர், இந்த கருத்தை அமோதிக்கும் வகையில் தங்கள் பதிவினை வெளியிட்டு வருகிறார்கள். பாஜக+ ஓபிஎஸ் அணி + அமமுக(டிடிவி) + தமாகா(ஜிகே வாசன்) + பாமக+ தேமுதி+ ஐஜேகே + புதிய தமிழகம் (கிருஷ்ணசாமி)+ தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் (ஜான்பாண்டியன்)+ புதிய நீதி கட்சி + தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி (திருமாறன்ஜி) கூட்டணி 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமைய வாய்ப்பு உள்ளதாக பாஜக ஆதரவாளர்கள் கூறுகிறார்கள் .












Click it and Unblock the Notifications