இப்டி சொதப்பிட்டீங்களே சார்.. எடப்பாடியை நீக்கியது எப்படி செல்லும்? -பன்னீரிடம் கேட்கும் நெட்டிசன்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள கடிதத்தில் உள்ள பிழையை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஓ.பி.எஸ். தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகளை கடந்து 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.

ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

ஓபிஎஸ் நீக்கம்

ஓபிஎஸ் நீக்கம்

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சிறப்பு தீர்மானம் போட்டு நீக்கப்பட்டனர்

18 பேர் நீக்கம்

18 பேர் நீக்கம்

இந்த நிலையில் மேலும் 18 பேரை கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பி.எஸ். மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.என்.பி.வெங்கட்ராமன், ஆர்.டி.ராமச்சந்திரன், எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், ஓம் சக்தி சேகர், கோவை செல்வராஜ், முன்னாள் எம்.பிக்கள் கோபாலகிருஷ்ணன், சையதுகான் உள்ளிட்டோர் நீக்கப்பட்டு உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

அதேபோல் மருது அழகுராஜ், வினுபாலன், அஞ்சுலட்சுமி, சைதை எம்.எம்.பாபு, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், வைரமுத்து, அசோகன் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர். இதற்கு பதிலடி தரும் விதமாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 22 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

22 பேர்

22 பேர்

செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கோகுல இந்திரா, வளர்மதி, ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜு, ஆதிராஜாராம், ஜக்கையன், ராஜன் செல்லப்பா, தி.நகர். சந்தியா, விருகம்பாக்கம் ரவி, அசோக், கந்தன், இளங்கோவன் ஆகியோரை நீக்குவதாக அறிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

கடிதத்தில் பிழை

கடிதத்தில் பிழை

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை நீக்கம் செய்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட 3 பக்க கடிதத்தில் உள்ள பிழையை தற்போது நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி கருத்திட்டு வருகின்றனர். அந்த அறிக்கையின் மேல் குறிப்பிடப்பட்டு இருக்கும் நாளில் 14.07.2021 என்று குறிப்பிட்டப்பட்டு இருக்கிறது. தற்போது 2022 ஆம் ஆண்டு நடந்து வரும் நிலையில் தேதியில் பன்னீர்செல்வம் தவறு செய்திருப்பதால் இது செல்லுமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+