Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனி, மதுரையில் மாறிய ஓட்டு கணக்கு.. உதயசூரியனுடன் வருகிறார் ஓபிஎஸ்? தேவர் வாக்குகளுக்கு திமுக குறி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக அதன் வரலாற்றின் மிக முக்கியமான திருப்பத்தில் நிற்கிறது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த உள் கட்சிப் பூசல்கள் இப்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தல் கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியாக மாறியுள்ளது. இப்போது ஓபிஎஸ் திமுகவுக்கு சென்றுள்ளது பலவிதமான கலக்கத்தையும் உண்டுபண்ணி வருகிறது.. எப்படி?

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் கட்சி ஒருமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், பிரிந்து சென்ற மூத்த தலைவர்களால் ஏற்படும் வாக்குச்சிதறல், தொண்டர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

OPS Plays Secret Card for Thevar Votes in Theni

மூத்த தலைவர் செங்கோட்டையன்

செங்கோட்டையன், கட்சியை இணைக்க வலியுறுத்தி, எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் நீக்கப்பட்டு, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது, கட்சியின் பாரம்பரிய ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம், டிடிவி. தினகரன், எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் மீது நீண்டகாலமாகத் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்து வந்தாலும், இப்போதைக்கு பாஜக கூட்டணியில் இணைந்து தனிப்பாதையில் பயணிக்கிறார்.

சசிகலா வாக்குகள்

அதேபோல, சசிகலாவும் தனிக் கட்சி மூலம் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கக் காய் நகர்த்தி வருவது, அ.தி.மு.க.வின் வாக்குகளை மேலும் பிரிக்கக்கூடிய வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இதில் அனைவருக்கும் ஷாக் என்னவென்றால், ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்திருப்பது தான்,

தனக்கென ஒரு அங்கீகரிக்கப்பட்ட சின்னம் இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டால், தனது ஆதரவாளர்களுக்குச் சின்னத்தைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் சிரமம் ஏற்படும் என்பதாலும், தோல்வி பயத்தாலும் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடத் தயாராகி வருகிறார். கொள்கை ரீதியாகத் தி.மு.க.வை எதிர்த்து வந்தாலும், அரசியல் இருப்பைத் தக்கவைக்க சின்னம் அவருக்கு அவசியமாக உள்ளது.

உதயசூரியன் சின்னம்

இதுதான் அதிமுகவின் அதிகார மையத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலமாக ஒற்றுமைக்கு குரல் கொடுத்து வந்த ஓபிஎஸ், கடைசி நேரத்தில் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து சமரசம் கிடைக்காததால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

ஓபிஎஸ், திமுகவில் இணைந்ததை அதிமுக தலைமை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாதது போல நடித்தாலும், இப்போது அவருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது, அவர்களின் உள்மன அச்சத்தையே காட்டுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் அவரது செல்வாக்கு, திமுகவுக்கு சாதகமாக மாறலாம் என்ற கவலை அதிமுகவினரியே அதிமுகவினரிடையே எழுந்துள்ளது.

கோவை, நெல்லை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் அதிமுகவுக்கு பாரம்பரியமான வாக்கு வங்கி உள்ளது. ஆனால் இப்போது சசிகலா, தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் என பிரிந்து சென்றவர்கள் அனைவரும் தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்த முயல்வதால், இந்த வாக்கு வங்கி கடுமையாக சிதறும் அபாயம் உள்ளது. இது, திமுக கூட்டணிக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கும் என்பது தெளிவு.

எடப்பாடி பழனிசாமி தரப்பு, கட்சியில் ஒற்றுமை இருப்பதாகத் தொடர்ந்து வலியுறுத்தினாலும், பிரிந்த சக்திகள் ஒன்றுசேராத வரை, தேர்தலில் வெற்றி பெறுவது சவாலான காரியமாகவே இருக்கும். 2026 தேர்தல் அ.தி.மு.க.வுக்கு ஒரு தற்காப்புப் போராட்டமாகவே மாறியுள்ளது.

ஓபிஎஸ் கணக்கு என்ன

பிரிந்த தலைவர்கள் அனைவரையும் இணைத்து, தொண்டர்களின் நம்பிக்கையை மீண்டும் வெல்லும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி இறங்குவாரா அல்லது இந்தச் சிதறல்களுடனேயே தேர்தல் களத்தைச் சந்திப்பாரா என்பதே தற்போதைய கேள்வியாகவும் எழுந்துள்ளது..

ஆனால் ஓபிஎஸ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் முக்கியப் பலனாகும். தென் மாவட்டங்களில் உள்ள அவரது ஆதரவு வாக்குகள் அப்படியே திமுகவுக்கு மாற்றும் வாய்ப்புதான்.

பச்சை துரோகி - விளைவுகள்

குறிப்பாக, தேவர் சமூகத்தினரின் வாக்குகளைக் குறிவைத்து, திமுக தனது பலத்தை தென் மாவட்டங்களில் அதிகரிக்க இந்த இணைப்பு உதவும்.. ஆனால், ஓபிஎஸ்ஸின் அனுபவமும், அவரது ஆதரவாளர்களின் களப்பணியும் திமுகவுக்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

இருந்தாலும் இந்த முடிவினால் ஏற்படும் பாதகங்களையும் நாம் சற்று ஆராய வேண்டி உள்ளது.. ஓபிஎஸ் மீது "பச்சைத் துரோகி" என்ற இமேஜ் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது, பன்னீர்செல்வத்தை நம்பி வந்த ஆதரவாளர்களையும், அதிமுகவின் தீவிர ரசிகர்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கும்.

கொள்கை ரீதியாகத் திமுகவை எதிர்த்து வளர்ந்த ஒரு தலைவர், தற்போது அதே கட்சியுடன் இணைந்திருப்பது அவரது நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்தச் சூழல், ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலத்தை நீண்ட காலத்திற்குப் பாதிக்கும், ஏனெனில் திமுக அவரைத் தங்களின் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தும் என்ற அச்சம் அவரது ஆதரவாளர்களிடம் நிலவுகிறதாம்.. அதனால் என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை... பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+