Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

OPS Vs EPS: பந்தை எடப்பாடி பக்கம் தள்ளிய ஓபிஎஸ்! பாச வலையை ஒற்றை சொல்லில் அறுத்த அதிமுக தலைவர்.. குழம்பும் பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ஒன்றிணைைய வேண்டும் என்பதே என் நோக்கம்.. நான் தனியாக வெற்றி வேண்டும், கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்பது நோக்கமில்லை.. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைய வேண்டும்.. அதிமுக அனைவரும் ஒன்றிணைய நான் தயார். டிடிவி தினகரன் மற்றும் என்னுடைய அருமை அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தயாரா?" என்று ஓபிஎஸ் எழுப்பியுள்ள கேள்வி இன்று என்டிஏ கூட்டணியை அசைத்து பார்க்க வைத்து வருகிறது.

அரசியல் ரீதியாக பெரும் சரிவை சந்தித்துள்ள ஓபிஎஸ், பாஜக இன்னமும் கைவிடாமல் பிடித்துக் கொண்டிருப்பது ஆச்சரியமான ஒன்றுதான்.. அமமுக தினகரன், கூட்டணிக்கு வருமாறு ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுத்தவாறு உள்ளார்..

OPS vs Edappadi Palanisamy

டிடிவி தினகரன் இப்படி அழைப்பு விடுத்ததே, ஓபிஎஸ் தற்போது காட்டியுள்ள இணக்கமான போக்கு தமிழக அரசியலில் வியப்பையும், விவாதங்களையும் கிளப்பி விட்டுள்ளது..

கசப்புகள் மறக்கப்படுமா?

கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை மறந்து, கட்சியின் நலனுக்காக மீண்டும் இணையத் தயார் என்று ஓபிஎஸ் வெளிப்படையாக சொல்லி உள்ளார்.. இது எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஒரு தார்மீக அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டையும் சற்று உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியிருக்கிறது,. வரப்போகும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவதே பாஜகவின் முதல் டார்கெட்டாக உள்ளது... அதற்கு அதிமுகவின் வாக்கு வங்கி சிதறாமல் இருப்பது அவசியம் என்பதை டெல்லி மேலிடம் நன்றாகவே உணர்ந்துள்ளது.

பாஜக திரைமறைவு காய்நகர்த்தல்

எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், தினகரன் என்று 3 பேரும் தனித்தனியே நிற்பது, ஆளுங்கட்சியான திமுகவுக்கே சாதகமாக முடியும் என்பது அரசியல் யதார்த்தம்... இதை சரிசெய்யவே தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பொதுவான குடையின் கீழ் இவர்களை ஒன்றிணைக்க பாஜக திரைமறைவில் காய்களை நகர்த்தி வருகிறது.

இருந்தாலும், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் இந்த ஒற்றுமை முயற்சிக்கு ஒரு பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. கட்சியில் மீண்டும் ஒரு இரட்டை தலைமை உருவாகிவிடக் கூடாது என்பதில் எடப்பாடி மிக உறுதியாக இருக்கிறார்...

ஓபிஎஸ் - டெல்லி சார்பு

ஓபிஎஸ் தரப்பை மீண்டும் சேர்ப்பது தேவையற்ற குழப்பங்களை மீண்டும் விதைப்பதற்கு சமம் என்பதே எடப்பாடி தரப்பினரின் ஒரே வாதம்... இரட்டை இலை சின்னமும், பெரும்பான்மையான தொண்டர்களும் தன் பக்கமே இருப்பதால், மற்றவர்களின் தயவின்றி தேர்தலை சந்திக்க முடியும் என்ற நம்பிக்கையில் எடப்பாடி தொடர்ந்து மௌனம் காக்கிறார்...

ஆனால், தென் மாவட்டங்களில் ஓபிஎஸ், தினகரனுக்கு இருக்கும் வாக்கு செல்வாக்கை அவ்வளவு எளிதாக தள்ளிவிட முடியாது என்பதும் மறுக்க முடியாத கள உண்மை.

ஓபிஎஸ் ஓபிஎஸ் சொல்லியிருக்கும் வார்த்தைகள், தன்னை ஒரு தேசிய ஜனநாயக கூட்டணியின் விசுவாசியாக காட்டி கொள்வது போலவே உள்ளது.. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ பாஜகவிடம் இருந்து விலகியே இருக்க விரும்புவதாக தெரிகிறது. இந்த மாறுபட்ட நிலைப்பாடுதான், இருவருக்கும் இடையே இருக்கும் இடைவெளியை இன்னும் அதிகமாக்குகிறது...

அதிமுகவின் ஒற்றுமை சாத்தியமா

சுருக்கமாக சொன்னால், அதிமுகவை ஒரு தனித்துவமான திராவிட இயக்கமாக முன்னிறுத்த எடப்பாடி பழனிசாமி விரும்பும்போது, ஓபிஎஸ்ஸின் டெல்லி சார்பு நிலைப்பாடு அதற்கு முரணாக அமைகிறது... அதனால்தான் ஓபிஎஸ் எவ்வளவுதான் ஒற்றுமை குறித்து பேசினாலும், அது எடப்பாடியின் மனதை மாற்றுவதற்கு பதில் அவரை மேலும் எச்சரிக்கையாகவும், பிடிவாதமாகவும் மாற்றுவதாக உள்ளது..

அதிமுகவின் வாக்குகள் சிதறுவதை தடுக்க தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாக இருந்தாலும்கூட, அதிகாரப் பகிர்வு மற்றும் கொள்கை முரண்பாடுகள் அதற்கு தடையாக இருக்கின்றன என்பதே உண்மை..

தவிடுபொடி கணக்குகள்

ஏனென்றல், ஓபிஎஸ்ஸின் இந்த "ஒற்றுமை முழக்கத்தை" எடப்பாடி பழனிசாமி தரப்பு கிஞ்சித்தும் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. "ஓபிஎஸ்ஸை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி மிகத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தற்போது மறுத்துள்ளார்..

கட்சியின் பொதுக்குழு முடிவுகளும், நீதிமன்றத் தீர்ப்புகளும் தன் பக்கம் இருக்கும் தைரியத்தில், துரோகம் செய்தவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்ற தனது பழைய நிலைப்பாட்டில் அவர் உறுதியாக நிற்பதாக தெரிகிறது..

டெல்லி போடும் திட்டம்

எடப்பாடியின் இந்த கறார் பதிலடி, டெல்லி மேலிடத்திற்கும் ஓபிஎஸ் தரப்பிற்கும் ஒரு நேரடி சவாலாகவே பார்க்கப்படுகிறது. தொண்டர்களின் பலம் தன்னிடம் இருக்கும்போது, தனித்துவத்தை இழந்து எதற்காக மற்றவர்களுடன் இணைய வேண்டும் என்பதே இபிஎஸ்ஸின் லாஜிக்காக உள்ளது..

அதிமுகவின் பிளவை சரிசெய்ய டெல்லி போடும் கணக்குகள் ஒவ்வொன்றும் எடப்பாடியின் பிடிவாதத்தால் தவிடுபொடியாகி கொண்டிருக்கின்றன.

எனினும், 2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஒருவேளை டெல்லியின் அழுத்தம் அதிகரித்தாலோ அல்லது தேர்தல் கள சூழல் மாறினாலோ மட்டுமே இந்த நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது... அதுவரை, அதிமுகவின் இந்த ஒற்றுமைப் படலம் என்பது எட்டாக்கனியாகவே நீடிக்கும் போல தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+