செங்கோட்டையன் -விஜய் -டிடிவி! அடுத்தடுத்து நடக்குதே.. ஸ்டன் ஆகிய எடப்பாடி! யோசித்து இருக்க மாட்டாரே
சென்னை: அதிமுக உள்ளேயும்.. வெளியேயும் அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களால் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக ஸ்டன் ஆகி உள்ளதாக கட்சி உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் முடிவு - எடப்பாடி ஷாக்
தமிழக வெற்றிக் கழகம் கட்சி 2026 சட்டசபை தேர்தலை தனியாக எதிர்கொள்ள.. தனியாக கூட்டணி அமைத்து சந்திக்க முடிவு செய்துள்ளது.

தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என்று தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தவெகவின் இந்த முடிவு அதிமுக தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கோடானு கோடி மக்களின் பேராதரவைப் பெற்று, முதன்மைச் சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் நம் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது என்றும். தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தைக் கழகத் தலைவர் அவர்களுக்கே வழங்கி, இச்சிறப்புப் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது., என்று இதில் கூறப்பட்டது. விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக எடப்பாடி தரப்பை இது பெரிய அளவில் அப்செட் ஆக்கி உள்ளது.
அதிமுக - தவெக கூட்டணி வரும் என்று எடப்பாடி ஆசையாக இருந்தார். எடப்பாடி மற்றும் அதிமுகவினர் முடிந்த அளவு ஊடகங்களில், பொது மேடைகளில் விஜயை ஆதரித்து பேசிக்கொண்டு இருந்தனர். இப்போது அதே விஜய் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பி உள்ளார்.
டிடிவி தினகரன் முடிவு - எடப்பாடி ஷாக்
அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் செங்கோட்டையன் திடீரென கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார். அதில், அதிமுக தொடர் தோல்விகளை தழுவி வருகிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை, உடனே சேர்க்க வேண்டும்... பத்து நாட்களில் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால் அவர்களுடன் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுவேன், என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் காலக்கெடு விதித்தார்.
அதன்பின் டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் எதிரி என்று டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து பேட்டி கொடுத்துள்ளனர். துரோகத்தை வீழ்த்தவே நாங்கள் மூவரும் இணைந்துள்ளோம் என்று கூறிய டிடிவி தினகரன், சசிகலா வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய டிடிவி தினகரன், எங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமே பழனிசாமிதான். துரோகத்தை வீழ்த்தவே அமமுக தொடங்கப்பட்டது. அந்த துரோகத்தை வீழ்த்தும் வரை அமமுக ஓயாது. துரோகத்தை வீழ்த்தி ஜெயலலிதா ஆட்சியை உருவாக்கவும், ஜெயலலிதாவின் தொண்டர்களை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒன்றிணைந்துள்ளோம், என்று டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
இதையடுத்து அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கே.ஏ.செங்கோட்டையனை அதிரடியாக நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
செங்கோட்டையன் மூவ் - எடப்பாடி ஷாக்
செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்திக்கையில், தவெக கொடியை பார்த்ததும் கூட்டணிக்கு, பிள்ளையார் சுழி போடப்பட்டது என்று கூறினார். ஆனால் அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி எதையோ நினைத்து பேசினார். அதற்கு பின் நடந்ததை பாருங்கள். ஒருவர் முன்னேற வேண்டும் என்றால் தன் காலிலே நடந்து செல்ல வேண்டும். பிறரின் முதுகில் ஏறி பயணம் செய்யக் கூடாது.
இபிஎஸ் மகன், மருமகன், மைத்துனர்தான் அதிமுகவை நடத்துகின்றனர். நாங்கள் முன்மொழிந்து இருக்காவிட்டால் இபிஎஸ் முதலமைச்சராகி இருக்க முடியாது . தொகுதி மேம்பாட்டுக்காக நான் செய்ததை விட எடப்பாடியில் அவர் செய்யவில்லை. இபிஎஸ் முதலமைச்சராக வாய்ப்பு தந்தவர் சசிகலா. ஆனால் அவரையே கொச்சையாக பேசினார். கட்சிக்கு உழைத்தவர்களை மறந்துவிட்டு பணக்காரர்களுக்கு சீட் வழங்கியவர் இபிஎஸ். அதிமுகவை பாதுகாத்த பாஜகவை 2024 தேர்தலின்போது கழட்டி விட்டார். தன்னைச் சுற்றியிருந்த யாரையும் அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கியது இல்லை. 2009ல் இவரை நீக்கினார், என்று செங்கோட்டையன் கூறி உள்ளார். செங்கோட்டையனின் இந்த தொடர் எதிர்ப்பு எடப்பாடி பழனிசாமியை கடுப்பாக்கி உள்ளது.
-
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்











Click it and Unblock the Notifications