ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.. நயினாருக்கு சப்போர்ட்டாக வந்த தமிழிசை
சென்னை: ஓ பன்னீர்செல்வம் இன்னும் நிதானமாக தனது அரசியல் நகர்வுகளை செய்திருக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். ஓபிஎஸ் - நயினார் நாகேந்திரன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது என்றும், தலைவர்கள் பொய் சொல்ல வாய்ப்பு இல்லை. நயினார் நாகேந்திரன் தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் கூறியதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை, அதே நேரத்தில் எங்கள் தலைவரை ஒருவர் குறை கூறுவதை எங்களால் ஏற்க முடியாது என்றும் தமிழிசை கூறினார்.
அதிமுகவில் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை ஆரம்பித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இதையடுத்து பாஜகவும் ஓ பன்னீர்செல்வத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

பாஜக கூட்டணியில் இருந்து விலகல்
ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும் மோடி மற்றும் அமித்ஷா ஓ பன்னீர் செல்வத்தை சந்திக்க அனுமதி கொடுத்ததில்லை. கடந்த மாதம் தூத்துக்குடி மற்றும் சோழபுரம் வருகை தந்த பிரதமர் மோடி ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. ஓ பன்னீர்செல்வம் மோடிக்கு கடிதம் அனுப்பியும் அவர் நேரம் ஒதுக்காததால் கடும் அதிருப்தியில் இருந்தார்.
இதையடுத்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்த ஓ பன்னீர்செல்வம் பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட வாரியாக மக்களை சந்திக்கப் போவதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட பிறகு இப்படி நடந்துள்ளதால் அவரை விமர்சித்து ஓ பன்னீர் செல்வம் கூறியிருந்தார்.
தமிழிசை சவுந்தரராஜன் கருத்து
இதற்கு தமிழக மூத்த பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நயினார் நாகேந்திரனை ஓ பன்னீர்செல்வம் குறை சொல்வதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார். பாஜக என்ற கட்சியில் இருக்கிறோம். அதன்படி எங்கள் தலைவரை ஒருவர் குறை கூறுவதை எங்களால் ஏக முடியாது. ஓ பன்னீர்செல்வம் இன்னும் நிதானமாக முடிவு எடுத்து இருக்க வேண்டும்.
இன்னும் நிதானமாக தனது அரசியல் நகர்வுகளை ஓ பன்னீர்செல்வம் செய்திருக்க வேண்டும். ஓபிஎஸ் நயினார் நாகேந்திரன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன் தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் கூறியதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. அதே நேரம் தலைவர்கள் பொய் சொல்வதற்கு வாய்ப்பு இல்லை என்று தமிழிசை கூறினார்.
நயினார் நாகேந்திரன் கருத்து
முன்னதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஓ பன்னீர்செல்வம் பற்றி குறை கூற மாட்டேன் என்று கூறினார். அவர் கூறுகையில், "ஓ பன்னீர்செல்வம் என்னை பற்றி குறை கூறினாலும், நான் அவரைப் பற்றி குறை கூற மாட்டேன்.. முதல்வரை சந்திப்பதற்கு முந்தைய நாள் கூட நான் பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டேன்.. ஓ பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதம் எனக்கு இன்னு கிடைக்கவில்லை" என்று கூறியிருந்தார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications