வேணாம்னே.. அவங்க சொல்லிட்டாங்க! காதில் ஓதிய ஓபிஎஸ் ஆதரவாளர் - சட்டென பேச்சை நிறுத்திய கோவை செல்வராஜ்
சென்னை: எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று ஓபிஎஸ் வீடு முன் அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டி அளித்துக்கொண்டிருந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கூறியதால் உடனே பேச்சை நிறுத்திவிட்டு அவர் புறப்பட்டார்.
Recommended Video
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகள், போராட்டக்கங்களை கடந்து கடந்த 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூடியது. அதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர் என்று நிறைவேற்றப்பட்டு இருந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அனைவரும் எதிர்பாத்ததைபோல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.

ஓபிஎஸ் வழக்கு
இந்த நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ஐகோர்ட் உத்தரவு
இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வெளியிட்டு உள்ளது. அதில் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுகூட்டம் செல்லாது என்று தெரிவித்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், இருவரும் இனி தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

கோவை செல்வராஜ்
தீர்ப்பு வெளியானவும் ஓபிஎஸ் இல்லத்தின் முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அவரது ஆதரவாளரும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான கோவை செல்வராஜ், "அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருமனதாக ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சியை கட்டுப்பாட்டோடு நடத்த வேண்டும் என்று சொன்ன நேரத்தில் சில சுயநலவாதிகளை சேர்த்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக தனித் தலைவராக வேண்டும் என்ற சதிகார செயலோடு செயல்பட்டார்.

விதிகளை மீறிய ஈபிஎஸ்
அதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் கையெழுத்தோடு 23 ஆம் தேதி கூடிய பொதுக்குழு எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமலேயே கலைந்து சென்றது. 11 ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிசாமி கட்சி விதியை மதிக்காமல் கட்சியை கட்டுப்படாமல், கட்சி சட்ட விதிகளை மீறி செயல்பட்டார். இதனால் இன்று நீதி தேவதை ஜூன் 25 ஆம் தேதிக்கு பிறகு நடந்த அனைத்தையும் ஒத்திவைத்துள்ளது.

தலைவணங்கி ஏற்கிறோம்
எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும், அவரால் நீக்கப்பட்டதும், அவரால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதும் நிராகரிக்கப்பட்டது. இனி ஆண்டுக்கு ஒருமுறையே பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்ற விதிப்படி இந்த ஆண்டு பொதுக்குழுவை கூட்ட முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிறுத்த சொன்ன ஓபிஎஸ் ஆதரவாளர்
என்று அவர் பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர், கோவை செல்வராஜ் காதில், "அண்ணே ஒரு நிமிசம்.. பேட்டி கொடுக்க வேண்டாம்னு சொல்லி இருக்காங்க." என்று கூறி சென்றார். உடனே, "நீதிமன்றம் நியாயத்தின் பக்கம், தர்மத்தின் பக்கம், சத்தியத்தின் பக்கம் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவாக கொடுத்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். அதிமுகவை கட்டிக்காப்போம்." என்று சொல்லிவிட்டு பேட்டியை முடித்துச் சென்றார் செல்வராஜ்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications