மாணவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய திட்டம்? டெல்லி காவல் ஆணையருக்கு கூடுதல் அதிகாரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும் அதிகாரத்தை டெல்லி காவல் ஆணையருக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது. இந்த சட்டத்தின்படி கைது செய்யப்பட்டால் எந்த விசாரணையும் இன்றி ஓராண்டு வரை சிறையில் இருக்க வேண்டி வரும்.

மாணவர்களின் எதிர்காலம்தான் முக்கியம் என்று இன்று காலைதான் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். இப்படி இருக்கையில், தற்போது டெல்லி போலீஸ் கமிஷ்னருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Delhi Police

டெல்லி மாணவர் போராட்டம்

நீட், சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 1 மாத்திற்கும் மேல் டெல்லியில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த 20ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர்.

தடியடி நடத்திய போலீஸ்

இவர்களை தடுத்து நிறுத்திய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினர் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மட்டுமல்லாது பெல்லட் துப்பாக்கிகள், மின் அதிர்வு லத்திகள் மாணவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இருப்பினும் மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறவில்லை. இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

புதிய அதிகாரம்

சூழல் இப்படி இருக்கையில், மத்திய அரசு டெல்லி போலீஸ் கமிஷ்னருக்கு புதிய அதிகாரத்தை கொடுத்திருக்கிறது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி யாரை வேண்டுமானாலும் டெல்லி போலீஸ் இனி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யலாம். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களையும், இளைஞர்களையும் கைது செய்யவே இப்படியான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

வழக்கமான நடைமுறைதான்

ஆனால் போலீசார் இதை மறுத்துள்ளனர். இது வழக்கமான நிர்வாக நடைமுறைதான். தற்போது நடக்கும் போராட்டத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருக்கின்றனர். தேசிய பாதுகாப்பு சட்டம் 1980ன்படி டெல்லி போலீஸ் கமிஷ்னருக்கு இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க டெல்லி துணை நிலை ஆளுநருக்கு இருக்கிறது.

அதன்படி ஜூலை 19 முதல் அக்டோபர் 18 வரை தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஆணை ஜூலை 7ம் தேதி.. அதாவது கரப்பான் ஜனதா கட்சியின் போராட்டம் தொடங்குவதற்கு முன்னரே வழங்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+