மீண்டும் கொளத்தூர் பக்கமே வரக்கூடாது.. ஸ்டாலினுக்கு செக் வைக்கும் தவெக.. விஎஸ் பாபுவை அழைத்த விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபுவை திடீரென முதல்வர் விஜய் தனியாக அழைத்து பேசி இருக்கிறார். கொளத்தூர் தொகுதியில் செய்ய வேண்டிய பணிகள், நிலுவையில் உள்ள திட்டங்கள், புதிய திட்டங்கள் தொடர்பாக இந்த ஆலோசனை நடந்திருக்கிறது. முதல்வர் விஜய்யின் இந்த ஆலோசனைக்கு பின்னணியில் ஒரு அரசியல் கணக்கு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

சட்டசபைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து தவெக சார்பாக போட்டியிட்ட விஎஸ் பாபு வெற்றி பெற்றார். ஸ்டாலின் தோல்வி அடைந்தாலும், கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்த போதே, அவர் மீது அனுதாப அலை ஏற்பட்டது. இதனை தவெக தலைமை அறிந்தே வைத்திருக்கிறது. தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 2ல் மட்டுமே தவெக வென்றது.

Vijay

அதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் தவெக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை உள்ளாட்சி தேர்தலில் தக்க வைத்து கொள்ள விஜய் தீவிரமாக இருக்கிறார். இதனிடையே பெரம்பூர் தொகுதியில் ரூ.1,013 கோடி மதிப்பிலான திட்டங்களை 3 ஆண்டுகளுக்கு மேற்கொள்ள விஜய் முடிவு செய்து நிர்வாகிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தி இருக்கிறார்.

வடசென்னையில் முகத்தை மாற்றினால், மக்களின் ஆதரவு தவெகவுக்கு நிரந்தரமாக இருக்கும் என்பது விஜய்யின் கணக்காக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பெரம்பூர் மட்டுமல்லாமல் கொளத்தூர் தொகுதியிலும் பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள விஜய் தீவிரமாக இருக்கிறார். இதனால் கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவை அழைத்து நேரில் பேசி இருக்கிறார்.

அப்போது கொளத்தூரும் எனது தொகுதி போல் தான்.. அங்கு நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள், மேற்கொள்ள வேண்டிய பணிகளை திட்டமிட்டு கொண்டு வருமாறு விஜய் அறிவுறுத்தி உள்ளார். இதன் மூலமாக ஸ்டாலின் மீதான அனுதாப அலையை குறைக்க வேண்டும் என்பதோடு, ஸ்டாலினை விடவும் கொளத்தூர் தொகுதிக்கு தவெக முன்னுரிமை அளிக்கிறது என்பதை காட்டவும் விஜய் முடிவு செய்துள்ளார்.

இதன் மூலமாக ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடக் கூடாது என்பதே தவெகவின் கணக்காக இருக்கிறது. திமுகவின் முக்கிய தலைகள் சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு மாறினால், அதுவே மிகப்பெரிய செக்காக அமையும். இதனை விஜய் வெற்றிகரமாக செய்து முடிக்க தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+